ஸ்மார்ட்போன் ஏன் ஸ்லோ ஆகின்றன (Why my phone is slow in Tamil) என்ற கேள்வி ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் அனைவரின் மனதிலும் கண்டிப்பாக எழும்.
ஆம்! ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு தினமும் அதிகரித்த வண்ணமே உள்ளது. பெரும்பாலான பணிகளை ஸ்மார்ட்போன்களிலேயே செய்துக்கொள்ளக்கூடிய வசதிகள் உள்ளன.
அவ்வாறு பயன்படுத்தும் பொழுது உங்களது ஸ்மார்ட்போன் சற்று மந்தமாக தொழிற்படுவதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள்,.
சில வேலைகளில் சற்றென்று நின்று போகும் (Stuck) சந்தர்ப்பங்களும் உண்டு. ஏன் இவ்வாறு நடக்கின்றன என்பதற்கு சில காரணங்கள் உண்டு.
சேமிப்பகத்தில் (Storage) இடவசதி இல்லாமை – Why my phone is slow in Tamil
நீங்கள் புதிதாக ஒரு ஸ்மார்ட்போன் வாங்கிய போது, அந்த ஸ்மார்ட்போனில் அதிக இடவசதி இருக்கும்.
நாட்கள் செல்ல செல்ல நிறைய ஆப்ஸ்களை (Apps) நிறுவுவீர்கள் (Install). புகைப்படங்கள் (Photos), கானொளிகள் (Videos) போன்றவற்றை சேமித்து வைப்பீர்கள்.
அது மட்டுமல்லாமல், கேச் கோப்புகள் (Cache Files) என்று சொல்லப்படுகின்ற முறைமை கோப்புகள் (System Files) உங்களது சேமிப்பகத்தில் தானாகவே சேமிக்கப்படும்.
இவ்வாறு சேமிக்கப்பட்டு உள்ளக சேமிப்பகத்தில் (Internal Storage) இடம் குறையும் போது, ஸ்மார்ட்போன் மந்தமாக தொழிற்பட ஆரம்பிக்கும்.
இவ்வாறு இடவசதி குறைந்துகொண்டே போகும் போது, ஒரு நிலையில் ஸ்மார்ட்போனால் தொழிற்படவே முடியாமல் போகின்றது.
சில வேலைகளில் “மெமரி புல்” (Memory Full) என்று அறிவிப்பு வருவதை பார்த்திருப்பீர்கள். போதுமான அளவு வெற்றிடம் இல்லாமல் போகும் போது ஸ்மார்ட்போன் மந்தமாக தொழிற்படுகிறது.
பிண்ணனி ஆப்ஸ் தொழிற்படல் (Background Apps)
ஸ்மார்ட்போன்கள் மந்தமாக தொழிற்படுவதற்கு இது ஒரு முக்கியமான காரணம் ஆகும். அதாவது, உங்களது ஸ்மார்ட்போனில் பிண்ணனியில் சில ஆப்ஸ் இயங்கிக்கொண்டிருக்கும்.
அத்துடன், நீங்கள் பெரும்பாலும் பயன்படுத்தாத ஆப்ஸும் இயங்கிக்கொண்டிருக்கும். இவ்வாறு பிண்ணனியில் செயற்படும் ஆப்ஸ் தனது தரவுகளை புதுப்பித்தல், இணையத்துடன் தொடர்பில் இருத்தல், முறைமையின் சில பகுதிகளை கண்காணித்தல் போன்ற பணிகளை செய்யும்.
அதுமட்டுமன்றி, பிண்ணனியில் வைரஸ் தொழிற்டவும் வாய்ப்பு உள்ளது. ஆனால், உங்களது ஸ்மார்ட்போனில் மட்டுப்படுத்தப்பட்ட அளவு ரெம் (RAM), ப்ரொசசர் வேகம் (Processor Speed) இருந்தால், அதிகமான செயற்பாடுகளை செய்ய முடியாமல் போகும்.
இதனால், மெதுவாக ஸ்மார்ட்போன் செயற்படும்.
ஆப்ஸ் புதுப்பித்தல் (Apps Updates)
ஸ்மார்ட்போனின் உள்ள ஆப்ஸை நீங்கள் புதுப்பித்துக்கொண்டே இருப்பீர்கள்.
அவ்வாறு புதுப்பிக்கப்பட்ட பதிப்புகளை (Versions) நிறுவும் போது, ஸ்மார்ட்போனில் உள்ள பழைய வன்பொருள்களால் (Hardware) சரியாக செயற்பட முடியாமல் வேகமாக தொழிற்பட போராட வேண்டி இருக்கும்.
அத்துடன், இயக்க முறைமையின் பணியும் (Task of Operating System) அதிகரிக்கும். புதுப்பிக்கப்பட்ட ஆப்ஸின் கொள்ளளவும் அதிகரிப்பதால், அவை ரெம் இல் அதிக அளவை பயன்படுத்த வேண்டி இருப்பதால், ஸ்மார்ட்போன் மந்தமாக தொழிற்பட தொடங்கிவிடும்.
மின்கலம் பழைமையாதல்
ஸ்மார்ட்போன் வாங்கி சாதாரணமாக இரண்டு அல்லது மூன்று வருடங்கள் ஆன பிறகு, முழுமையாக சார்ஜ் (Charge) செய்த பின்பும் மின்சக்தி சீக்கிரமாக குறைவதை அவதானிக்க கூடியதாக இருக்கும்.
அதாவது, முழுமையாக ஒரு நாள் கூட பயன்படுத்த முடியாமல் இருக்கும். இவ்வாறு பழமையான மின்கலத்தின் மின்வாயில் மெல்லிய படலம் உருவாவதிலிருந்து மின்கலத்தினுள் உள்பக்க தடையை அதிகரிக்கும்.
மின்னோட்டத்தின் போது தடை அதிகரிக்கையில் மின்னழுத்த வீழ்ச்சி ஏற்படுகிறது.
மின்னழுத்த வீழ்ச்சி காரணமாக வெப்பமாக விரயம் செய்யப்படும் சக்தியால் ஸ்மார்ட்போனின் உள்பக்க வன்பொருள்களும் சூடாக்கப்படுகின்றன.
இவ்வாறு நிகழும் போது சி.பி.யூ (Central Processing Unit (CPU)) மற்றும் ரெம் ஆகியவற்றுக்கான மின்சாரம் போதுமானதாக இருக்காது.
இதனால் ஸ்மார்ட்போனின் செயற்பாடுகள் மந்தமாக வாய்ப்பு உள்ளது.
இவ்வாறான காரணங்களினால் உங்களது ஸ்மார்ட்போன் மந்தமாக தொழிற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. நாம் பயனபடுத்தும் ஸ்மார்ட்போனின் பாவணை பற்றி கண்டிப்பாக கருத்தில் கொள்ளவேண்டும்.
காரணம் நாம் நமது பல அன்றாட வேலைகளை ஸ்மார்ட்போனினூடாக இலகுவாக செய்துகொள்கிறோம்.
ஆகவே உங்களது ஸ்மார்ட்போன் மந்தமாக செயற்பட்டால் அதற்கான காரணங்களை அறிந்து அதை நிவர்த்தி செய்து பயன்படுத்துவதே சிறந்த தீர்வாகும்.
ஸ்மார்ட்போன் ஏன் ஸ்லோ ஆகின்றன (Why my phone is slow in Tamil) என்பது பற்றி இப்பொழுது நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இப்பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே பதிவிடுங்கள். மேலும், பலரும் அறிந்துகொள்ள தயவுசெய்து பகிருங்கள்.
மேலும் வாசிக்க:
My name is Ganeshan Karthik. I am a blogger, YouTuber, and affiliate marketer. I design professional blogs and websites using WordPress. This is one of my websites about online learning. Please contact me if you need a professional website for your business. For more details visit: Webthik.com.