முகநூல் நன்மைகள் தீமைகள் | Advantages and disadvantages of Facebook in Tamil

Advantages and disadvantages of Facebook in Tamil

பேஸ்புக் உலகின் மிக முக்கியமான ஒரு சமூக வலைதளமாகும். தினமும் பல கோடி மக்கள் இவ்வலைதளத்தை பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றுள்ள இத்தளம் எளிதாக பயன்படுத்தக்கூடியதாக உள்ளது.

மேலும், பயனர்களால் பெரிதும் கவரப்படுகிறவாறு அமைக்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கை உலகமெங்கும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பயன்படுத்துகிறார்கள்.

பெரும்பாலும், பொழுதுபோக்காக தான் பயன்படுத்துகிறார்கள். எனினும், வியாபார நோக்கமாகவும் வியாபாரத்தை பெரிதாக்கிக்கொள்ளவும் பேஸ்புக் பயன்படுகிறது. முகநூல் நன்மைகள் தீமைகள் (Advantages and disadvantages of Facebook in Tamil) பற்றி இனி விரிவாக தெரிந்துகொள்வோம்.

நன்மைகள் – Advantages and disadvantages of Facebook in Tamil

இலவசம்

பேஸ்புக்கில் கணக்கு உருவாக்குவது முற்றிலும் இலவசம். ஒரு மின்னஞ்சல் முகவரி அல்லது கையடக்கத்தொலைபேசி இலக்கத்தை வைத்து உலகில் எங்கிருந்துவேண்டுமென்றாலும் கணக்கை உருவாக்கி பயன்படுத்த முடியும்.

பேஸ்புக்கில் அதிகமான வசதிகளை இலவசமாகவே பயன்படுத்த முடியும். இருந்தாலும், விளம்பரங்கள் சம்பந்தமான விடயங்களுக்கு கட்டணம் அறவிடப்படும். பொதுவாக பார்த்தால், ஸ்மார்ட்போன்களிலேயே பேஸ்புக் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

இலகுவான இணைய தொடர்பாடல்

தற்போது பேஸ்புக்கை தினமும் பல கோடி மக்கள் பயன்படுத்துகிறார்கள். இலவசமாக ஆரம்பித்த கணக்கை வைத்து உலகில் எந்த பிரதேசத்தில் வசிப்பவர்களோடும் நண்பராக முடியும்.

முக்கியமாக உங்களது நண்பர்கள், குடும்ப அங்கத்தவர்கள், சக ஊழியர்கள் உட்பட அனைவருடனும் தொடர்புகொள்ள முடியும். நீங்கள் தொடர்பில் இல்லாத பழைய நண்பர்களையும் கூட பேஸ்புக்கில் தேடி கண்டுபிடித்து அவர்களுடன் மீண்டும் பழக வலிவகுக்கிறது.

அரட்டை

பேஸ்புக் நமக்கு வேண்டியவரை தொடர்புகொள்ள மிக இலகுவான வழிகளை ஏற்படுத்தித்தந்துள்ளது. குறிப்பாக, குறுந்தகவல் அனுப்பல் (SMS), ஆடியோ அழைப்பு மேற்கொள்ளல் (Audio Calls), வீடியோ அழைப்பு மேற்கொள்ளல் (Video Calls) போன்ற வசதிகளை பயன்படுத்தி நாம் மற்றவர்களை தொடர்புகொள்ள முடியும்.

நமது நண்பர்கள் பட்டியலில் உள்ள யாருடன் வேண்டுமானாலும் எளிதாக தொடர்புகொள்ளலாம். அத்துடன், குறுந்தகவல் முறையை பயன்படுத்தி புகைப்படங்கள், ஆடியோ கோப்புகள் (Audio Files), வீடியோ கோப்புகள் (Video Files), ஆவணங்கள் முதலிட்ட அனைத்தையும் பரிமாரிக்கொள்ள முடியும்.

மேலும், குழு அரட்டை (Group Chat) வசதியும் உண்டு. அதாவது, குழு ஒன்றை உருவாக்கி அதில் நண்பர்களை இணைத்து அனைவரும் ஒரே நேரத்தில் கருத்துக்களை பரிமார முடியும்.

செய்திகள் மற்றும் தகவல்கள் பெறல்

பேஸ்புக்கின் மிக முக்கியமான பயன்களில் ஒன்றாக செய்திகளையும் தகவல்களையும் விரைவாக பெற்றுக்கொள்ள முடிவதை சொல்லலாம். உண்மையாகவே, உலகில் என்ன நடந்தாலும் உடனே தெரிந்துகொள்ள முடியும்.

முக்கிய செய்திகள் அனைவராலும் பகிரப்பட்டு வைரல் ஆகின்றன. இதனால், சீக்கிரமாக செய்திகளையும் தகவல்களையும் தெரிந்துகொள்ள முடிகிறது.

எல்லையற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் காணப்படல்

நாம் பேஸ்புக்கை திறந்தவுடன் பலவகையான விடயங்களை பார்வையிட முடியும். அதாவது புகைப்படங்கள், கானொளிகள், செய்திகள் உள்ளிட்ட அனைத்து வகையான விடயங்களையும் பார்க்க முடியும்.

ஆகவே, பேஸ்புக்கை பயன்படுத்தும் போது நேரம் செல்வதை உணரவே முடியாது. மேலும், பேஸ்புக்கில் விளையாட்டுக்கள் கூட விளையாட முடியும். பிரபலமான நிறைய விளையாட்டுக்கள் உள்ளன. அவற்றில் உங்களுக்கு பிடித்ததை தைரிவுசெய்து விளையாட முடியும்.

வணிக மேம்பாடு

வணிகரீதியில் பேஸ்புக்கானது பாரிய பங்களிப்பை செய்து வருகிறது. சிறிய மற்றும் பெரிய வியாபாரங்களை மேலும் சிறப்பாக மேற்கொள்வதற்கு உதவிபுரிகிறது. குறிப்பாக, டிஜிட்டல் சந்தைப்படுத்தல் துறையில் அதிக பங்களிப்பு பேஸ்புக்கிற்கு உண்டு.

தங்களது பொருட்கள் மற்றும் சேவைகளை பேஸ்புக்கில் விளம்பரப்படுத்தி வியாபாரத்தை விருத்தி செய்ய முடியும். அத்துடன், பேஸ்புக்கில் உள்ள பயனர்களுக்கே விற்பனை செய்யவும் முடியும். இதனால், பாரிய அளவில் வாடிக்கையாளர் நம்பிக்கையை பெற்றுக்கொள்ள முடியும்.

தங்களது வணிக நிலையத்தின் பெயரில் ஒரு பேஸ்புக் பக்கம் ஒன்றை உருவாக்கி அதில் தமது பொருட்கள் மற்றும் சேவைகளை இடுகையிட்டு (Post) அல்லது சிறிய கட்டணங்கள் செலுத்தி வேறாக விளம்பரம் செய்து வியாபாரத்தை பெரிக்கிக்கொள்ள முடியும்.

பேஸ்புக் மூலம் பணம் சம்பாதித்தல்

பேஸ்புக்கை பயன்படுத்தி பகுதி நேரமாக அல்லது முழுநேரமாக பணம் சம்பாதிக்க முடியும். அதற்கு பல வழிகளை பேஸ்புக் நிறுவனம் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.

  • பேஸ்புக் இன்ஸ்டண்ட் ஆர்டிகல்ஸ் (Facebook Instant Articles)
  • பேஸ்புக் பக்கங்களில் வீடியோக்கள் பதிவேற்றம் செய்தல்
  • நேரடி வீடியோ போக்கு (Video Live Stream) மூலம், குறிப்பாக இணைய விளையாட்டுகள் (Online Games) விளையாடி பணம் ஈட்டல்
  • இணையதளம் மற்றும் ஆப் (App) ஐ சமர்பித்தல் மற்றும் பல முறைகளில் பேஸ்புக்கில் பணம் ஈட்ட முடியும்.
  • பேஸ்புக் சந்தைமையம் (Facebook Marketplace) மூலம் பொருட்கள், சேவைகளை விற்றல்

எனினும், அதற்கும் பல விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் உள்ளன. அவற்றை நன்கு அறிந்து அதனடிப்படையில் முயற்சித்தால் கண்டிப்பாக உங்களாலும் பேஸ்புக்கில் பணம் சம்பாதிக்க முடியும்.

முகநூல் நன்மைகள் தீமைகள் (Advantages and disadvantages of Facebook in Tamil) பற்றி இப்பதிவில் அடுத்து நாம் தீமைகளைப் பார்க்கலாம்.

தீமைகள் – Advantages and disadvantages of Facebook in Tamil

தனிப்பட்ட தகவல்கள் பகிரங்கமாக வெளியிடப்படல்

பேஸ்புக் கணக்கு ஒன்றை ஆரம்பிக்கும் போது முதல் மற்றும் கடைசி பெயர், மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண், பிறந்த திகதி, ஆணா அல்லது பெண்ணா என நம் அடிப்படை விபரங்களை பெற்றுக்கொண்டுதான் கணக்கை உருவாக்கி தருகிறார்கள்.

கணக்கு திறந்து உள்ளே சென்ற பிறகு, நம்மை பற்றி அனைத்து விபரங்களையும் கேட்கிறார்கள். நாமும் கொடுத்துவிடுகிறோம்.
நாம் கொடுத்த அனைத்து தகவல்களும் அப்படியே வெளிப்படையாக வெளியிடப்படுகின்றன. அத்தகவல்கள் எல்லாவற்றையும் யார்வேண்டுமென்றாலும் பார்க்க முடியும்.

மேலும், அனைவரும் பார்க்க முடியாதவாறு அல்லது நமது நண்பர்களுக்கு மாத்திரம் பார்க்க முடிகிறவாறு அல்லது நாம் மட்டும் பார்க்கும் வகையில் சில அமைப்புகளை மேற்கொள்ளவும் முடியும்.

இருந்தபொழுதிலும், கூட நாம் நமது தனிப்பட்ட விபரங்களை ஒரு தனிப்பட்ட இணையதளத்திற்கு கொடுத்துள்ளோம் என்பதை மறந்துவிடக்கூடாது.

அத்துடன், அத்தகவல்களை கொண்டு அவர்களால் என்ன வேண்டுமென்றாலும் செய்திடமுடியும். பேஸ்புக் பயன்படுத்தும் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பல்வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதாக பேஸ்புக் நிறுவனம் மீது குற்றச்சாட்டுகளும் உள்ளன.

பேஸ்புக் பயன்படுத்தும் யார்வேண்டுமென்றாலும் மற்றவர்களின் தகவல்களையும் புகைப்படங்களையும் வைத்து என்னவேண்டுமென்றாலும் செய்ய முடியும். மேலும், பேஸ்புக்கில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே ஆகும். அவர்களின் விபரங்களும் புகைப்படங்களும் அதிகளவாக தவறான முறையில் பயன்படுத்தப்படுகின்றன.

அத்துடன், பெண்களின் புகைப்படங்கள் பல தவறான இணையதளங்களுக்கும் நிறுவனங்களுக்கும் விற்கப்படுவதாக செய்திகள் வெளியாகின்றன. பெண்களின் பாதுகாப்பு பேஸ்புக்கில் கேள்விக்குறியாகவே உள்ளது.

அடிமையாதல்

பேஸ்புக்கில் அதிகளவான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளதால் தினமும் பல மணித்தியாலங்களை இதில் செலவிடுகிறார்கள். புகைப்படங்கள் பதிவேற்றம் செய்வது, மற்றவர்களின் புகைப்படங்கள் மற்றும் இடுகைகளுக்கு கருத்து (Comment) சொல்வது, வீடியோக்கள் பார்ப்பது, அரட்டை அடிப்பது மற்றும் மேலும் பல விடயங்களை செய்து அதற்குள்ளேயே மூழ்கியுள்ளார்கள்.

அத்துடன், தமது புகைப்படங்கள் மற்றும் இடுகைகளுக்கு அதிக லைக்ஸ் (Likes), கொமெண்ட்ஸ் (Comments), ஸெயார் (Shares) பெற வேண்டும் என்ற ஆர்வமும் இதற்கு காரணமாகிறது.

இந்நிலையானது அவர்களை ஒரு போதையில் வைத்திருப்பது போன்ற நோயை ஏற்படுத்துகிறது. இதை அவர்களாலேயே இனங்காண முடியாது.

நேரத்தை செலவிடல்

தினமும் பல மணித்தியாலங்களை செலவிடுவதால் பயனர்கள் தமது சொந்த வேலைகளையே மறந்துவிடுகிறார்கள். அதனால், குறித்த வேலைகளை குறித்த நேரத்தில் செய்யமுடியாமல் போகிறது.

பாடசாலை மற்றும் கல்லூரி மாணவர்கள் தற்போது அதிகமாக பேஸ்புக் பயன்படுத்துகிறார்கள். ஆகவே, அவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன.

அதிக நேரம் செலவிடும்போது பலருடன் அரட்டை அடிப்பதாலும் பல்வேறுபட்ட அம்சங்களை பார்வையிடுவதாலும் சில தீய பழக்க வழக்கங்களை பழகவும் இது வழிவகுக்கிறது.

மோசடிகள் மற்றும் போலி கணக்குகள்

பேஸ்புக்கை பொருத்தவரையில், அதிகபடியான போலி கணக்குகளை உருவாக்கி பல தவறான செயல்களை பலர் செய்துகொண்டு வருகிறார்கள்.

இவ்வாறு உருவாக்கப்படும் கணக்குகளை கொண்டு இனவாதத்தை தூண்டல், மற்றவற்களின் நற்பெயரை வீணாக்குதல், பல போலியான செய்திகளை பரப்புதல் உள்ளிட்ட பலவகையான கேடுவிளைவிக்கும் செயல்களை செய்கிறார்கள்.

அத்தோடு, இவ்வாறு பொய்யான கணக்குகளை வைத்திருக்கும் ஹெக்கர்கள் (Hackers) சில போலியான லிங்களை (Links) அனுப்புவார்கள். அதனை க்ளிக் (Click) செய்பவர்களின் முழுமையான தரவுகளையும் அவர்களால் திருட முடியும்.

குறிப்பாக அவர்கள் உங்களின் ஸ்மார்ட்போன் மற்றும் கணினியில் நீங்கள் சேமித்து வைத்துள்ள அனைத்தையும் அவர்களால் இலகுவாக பெற முடியும்.

முகநூல் நன்மைகள் தீமைகள் (Facebook merits and demerits in Tamil) பற்றி தற்போது நாம் அறிந்துகொண்டோம். பொதுவாக பொழுதுபோக்குக்காக பேஸ்புக்கை பயன்படுத்துவதை தவிர்த்து அதன் மூலம் உங்களின் வாழ்க்கை வளர்ச்சிக்கு தேவையான வகையில் பயன்படுத்தி நன்மை பெறுவது சிறந்த யோசனையாக இருக்கும்.

பேஸ்புக்கில் எவ்வளவு அனுகூலங்கள் உள்ளதோ அதற்கு சமனான பிரதிகூலங்களும் உள்ளன. பேஸ்புக் மட்டுமல்ல, இணையத்தை பயன்படுத்தும் நாம் அவை அனைத்திலுமே பிரதிகூலங்கள் உள்ளதை உணர்ந்து செயற்படவேண்டும்.

அதற்காக பல பாதுகாப்பு வழிமுறைகள் உள்ளன. கண்டிப்பாக பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பயன்படுத்துவது சாலச்சிறந்தது.

முகநூல் நன்மைகள் தீமைகள் (Advantages and disadvantages of Facebook in Tamil) பற்றிய இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கருந்துக்களை மறக்காமல் கொமண்டில் தெரிவிக்கவும். இப்பதிவை பலரும் அறிந்துகொள்ள அனைவருக்கும் பகிரவும்.

மேலும், புதிய பதிவுகளை விரைவாக அறிந்துகொள்ள எமது சமூக வலைதளங்களை பின்தொடருங்கள்.

இதையும் வாசிக்க

கணனியை கண்டுபிடித்தவர் யார்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top