Smart Tamil Trend Logo

டிஜிட்டல் மார்க்கெட்டிங் | Digital marketing in Tamil

Digital Marketing in Tamil

உலகில் தற்போது எல்லாமே தொழிநுட்பத்தின் வளர்ச்சி காரணமாக கணனிமயமாக்கப்படுகிறது. அது உண்மையிலேயே நமது தேவைகளையும் விருப்பங்களையும் எளிதில் பூர்த்தி செய்து கொள்ளவும், மிகவும் இலகுவான முறையில் நமக்கு தேவையானவற்றை பெற்றுக்கொள்ள உதவியாகவும் இருக்கிறது.

முன்பெல்லாம் சந்தைப்படுத்தல் என்பது வாய் மூலமாக பிரசாரம் செய்வது, கையேடுகள் (Handouts) அச்சிட்டு ஒவ்வொருவருக்கும் வழங்குவது, விற்பனைக்கான முன்னேற்ற முறைகளை (Promotions) கையால்வது போன்றவாறு செய்யவேண்டிய ஒரு சூழ்நிலை இருந்தது.

ஆனால், தொழிநுட்ப வளர்ச்சியின் விளைவாக பொருட்களையும் சேவைகளையும் சந்தைப்படுத்தும் எளிய முறைதான் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் ஆகிறது.

இனி, டிஜிட்டல் சந்தைப்படுத்தல் பற்றி (About Digital Marketing in Tamil) விரிவாக பார்ப்போம்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்றால் என்ன? | What is Digital Marketing in Tamil  

டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பது பொருட்களையும் சேவைகளையும் டிஜிட்டல் தொழினுட்பத்தின் மூலம் முக்கியமாக இணையத்தினூடாகவும் ஸ்மார்ட்போன்களினூடாகவும் அல்லது வேறு எதாவது டிஜிட்டல் ஊடகங்களினூடாகவும் (Medias) சந்தைப்படுத்தும் நவீன முறையாகும்.

இது முற்றிலும் பாரம்பரிய சந்தைப்படுத்தலில் இருந்து வேறுபடுவதோடு, இலகுவான முறையாகவும் இருக்கிறது.

தொழிநுட்ப வளர்ச்சியின் காரணமாக இந்த நவீன காலகட்டத்தில் இணைய பாவணையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இணையத்தினூடாக நமக்கு தேவையான அனைத்து பொருட்களையும், சேவைகளையும் பெற்றுக்கொள்ளக்கூடிய காலமாக இந்த காலம் மாறிவிட்டது.

அந்த வகையில், பாரம்பரிய முறையிலிருந்து சற்று விடுபட்டு மக்கள், தற்போது இணையத்தினூடாக பொருட்களை கொள்வனவு செய்ய பழகிக்கொண்டார்கள்.

மளிகைப்பொருட்களிலிருந்து  வாகனங்கள் வரை எல்லா பொருட்களையும் தற்போது இணையத்தில் கொள்வனவு செய்ய முடியும்.

சந்தைப்படுத்தல் என்பது சரியான பொருட்கள் மற்றும் சேவைகளை  சரியான இடத்தில், சரியான நேரத்தில் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பது தான்.

அந்த வகையில், அதிகரித்து வரும் இணைய பாவணையாளர்கள் மத்தியில் பொருட்களையும் சேவைகளையும் கொண்டு சேர்ப்பதற்கு டிஜிட்டல் சந்தைப்படுத்தல் என்பது ஒரு சிறந்த முறையாகும்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் வகைகள் | Types of digital marketing in Tamil

தேடு பொறி மேம்படுத்தல் | Search Engine Optimization

இது வலைத்தளம் (Website) அல்லது வலைப்பக்கத்தை (Webpage) தேடு இயந்திரத்தின் முடிவுகளில் (Search Engine Results) முதன்மையாக வரச்செய்யும் செயற்பாடு ஆகும்.

இதன் மூலம் நமது வலைத்தளங்களுக்கு வருகை தரும் பார்வையாளர்களை அதிகரிக்க முடியும். இது வலைத்தளங்களில் செய்ய வேண்டிய மிக முக்கியமான செயற்பாடாகும்.

தேடு பொறி மேம்படுத்தப்பட வேண்டியவற்றை கீழே பார்க்கலாம்.

  • வலைத்தளங்கள் (Websites)
  • வலைப்பதிவுகள் (Blogs)
  • விளக்கப்படங்கள் (Infographics)

தேடு பொறி சந்தைப்படுத்தல் | Search Engine Marketing

வலைத்தளங்களை தேடு பொறி முடிவு பக்கங்களில் முதல் நிலைகளில் வரச்செய்வதற்காக, முக்கியமாக கட்டணம் செலுத்தப்பட்டு விளம்பரப்படுத்தப்படும் இணைய சந்தைப்படுத்தல் (Internet Marketing) முறை தேடு பொறி சந்தைப்படுத்தல் ஆகும்.

இது தேடு பொறி மேம்படுத்தலுக்கு அப்பாற்பட்டதாகும்.

உட்பொருள் சந்தைப்படுத்தல் | Content Marketing

இணையத்தில் பார்வையாளர்களுக்காக உட்பொருள் உருவாக்கல் (Creating), உட்பொருள் வெளியிடல் (Publishing) மற்றும் உட்பொருள் விநியோகம் (Distributing) என்பவற்றுக்காக கவனம் செலுத்தப்படும் சந்தைப்படுத்தல் முறையாகும்.

இதன் மூலம் கிடைக்கும் சில நன்மைகள்.

  • பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து முதலிடத்தை தோற்றுவித்தல்
  • வாடிக்கையாளர் அடித்தளத்தை (Customer Base) அதிகரித்தல்
  • இணையத்தில் விற்பனையை அதிகரித்தல்
  • பொருட்கள் அல்லது சேவைகளின் விழிப்புணர்வு மற்றும் நம்பகத்தன்மையை அதிகரித்தல்
  • பயனர்களுக்கிடையே இணைய குழுவை (Online Community) உருவாக்குதல்

சந்தைப்படுத்தல் தன்னியக்க முறை | Marketing Automation

சந்தைப்படுத்தல் தன்னியக்க முறை என்பது சந்தைப்படுத்தல் திணைக்களங்களும் நிறுவனங்களும் தமது அடிப்படை சந்தைபடுத்தல் முறைகளை மேலும் திறம்பட மேற்கொள்ள மீண்டும் மீண்டும் தன்னியக்கமாக செயல்பட வடிவமைக்கப்பட்ட மென்பொருளை குறிக்கிறது.

அவைகள் சிலவற்றை தற்போது பார்ப்போம்.

  • மின்னஞ்சல் செய்திமடல் (Email Newsletter)
  • சமூக ஊடக இடுகை திட்டமிடல் (Social Media Post Scheduling)
  • தொடர்பு பட்டியல் புதுப்பித்தல் (Contact List Updating)
  • பிரச்சார கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடல் (Campaign Tracking and Reporting)

தொடர்புடைய சந்தைப்படுத்தல் | Affiliate Marketing

இது மற்றவர்களின் பொருட்கள், சேவைகளை விளம்பரப்படுத்துவதன் மூலம் முகவர் சேவை கட்டணம் (Commission) பெறும் சந்தைப்படுத்தல் முறையாகும்.

அதாவது, மற்ற வியாபார நிறுவனங்களின் குறிப்பாக, இலத்திரனியல் வணிகத்தை (E-Commerce) மேற்கொள்ளும் வலைத்தளங்களினுடைய பொருட்கள், சேவைகளை நமது வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தும் சந்தர்ப்பங்களில் பார்வையாளர்கள் கொள்வனவு மேற்கொண்ட பிறகு முகவர் சேவைக்கட்டணம் பெறும் சந்தைப்படுத்தல் முறையாகும்.

தொடர்புடைய சந்தைப்படுத்தல் முறையை வழங்கும் சில பிரபலமான இலத்திரனியல் வணிக வலைத்தளங்கள் உதாரணத்திற்கு.

சமூக ஊடக மேம்படுத்தல் | Social Media Optimization  

சமூக ஊடக மேம்படுத்தல் என்பது பல்வேறு சமூக ஊடக வலைப்பின்னல்களின் (Social Media Network) மூலம் நமது வலைத்தளத்திற்கு அதிக பார்வையாளர்களை பெற்றுக்கொள்வதற்காக செய்யப்படும் மேம்படுத்தல் முறையை குறித்து காட்டுகிறது.

சில சமூக ஊடக வலைப்பின்னல்கள்

சமூக ஊடக சந்தைப்படுத்தல் | Social Media Marketing

சமூக ஊடக மேம்படுத்தலுக்கு பிறகு அந்த வலைத்தளத்தினுடைய உள்ளடக்கம், பொருட்கள், சேவைகள் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி மேலும் அதிக பார்வையாளர்களை நமது வலைத்தளத்திற்கு பெற்றுக்கொள்ளும் சந்தைப்படுத்தல் முறையாகும்.

சில சமூக ஊடகங்களை பார்ப்போம்

மின்னஞ்சல் சந்தைப்படுத்தல் | Email Marketing

கம்பனிகள் தனது வாடிக்கையாளர்களை நேரடியாக மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளும் முறையாகும்.

அதாவது, கம்பனிகள் தனது பொருட்கள் மற்றும் சேவைகளை மேலும் அறிவிப்பதற்காகவும், அவற்றின் கழிவுகள் மற்றும் நிகழ்வுகள் பற்றி அறிவிப்பதற்காகவும், நேரடியாக வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ள மின்னஞ்சல் சந்தைப்படுத்தல் முறையை பயன்படுத்துகின்றன.

காட்சி விளம்பர சந்தைப்படுத்தல் | Display Advertising

பதாதைகள் (Banners) அல்லது மற்ற விளம்பர வடிவங்களான எழுத்து வடிவம் (Text), உருவப்படம் (Image), கானொளி (Video) மற்றும் ஒலி வடிவம் (Audio) போன்றவற்றை வலைத்தளங்களில் விளம்பரப்படுத்துவது ஆகும்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் முக்கியத்துவம் | Importance of Digital Marketing in Tamil   

கடந்த காலங்களை எடுத்துக் கொண்டால், பொருட்கள் மற்றும் சேவைகளை நுகர்வோரை அடையச்செய்வது பெறும் சவாலாகவும் கடினமானதாகவும் இருந்தது.

நுகர்வோருக்கு பொருட்கள், சேவைகளின் விபரங்களை கொண்டு சேர்ப்பதற்கான ஊடகங்கள் மிகக் குறைவு.

அவ்வாறு, விளம்பரப்படுத்தினாலும் கூட அதை எத்தனை பேர் அறிந்தார்கள் என்று கூட சொல்ல முடியாது.

அத்துடன், விளம்பரங்களுக்கான செலவுகளும் அதிகம். ஆனால், தற்போது டிஜிட்டல் சந்தைப்படுத்தல் முறை உருவானதற்கு பிறகு பொருட்கள், சேவைகள் பற்றிய விபரங்களை எளிதாகவும் மிக விரைவாகவும் நுகர்வோரை போய்ச் சேர்க்கவைக்க முடிகிறது.

அத்துடன், அந்த விபரங்கள் எவ்வளவு பேரை போய் சேர்ந்தது, எந்த இடத்தில் உள்ளவர்களுக்கு அதிகம் அறியக்கூடியதாக இருந்தது, எவ்வாறு போய் சேர்ந்தது என்ற அனைத்து விபரங்களையும் நம்மால் துள்ளியமாக அறிந்துகொள்ள முடியும்.

அதற்கான செலவுகளும் பாரம்பரிய சந்தைப்படுத்தலை ஒப்பிடும் பொழுது, மிகவும் குறைவாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், இதற்கான பாடநெறிகளை முழுமையாக கற்பதன் மூலம் அதிக வேலைவாய்ப்புக்களையும் பெறக்கூடியதாக உள்ளது.

ஆகவே, டிஜிட்டல் சந்தைப்படுத்தலை சரியாக அறிந்து முறையாக பயன்படுத்தி பயன்பெறுவோமாக.

மேலும் வாசிக்க

பேஸ்புக் பற்றிய தகவல்கள்
கணனியை கண்டுபிடித்தவர் யார்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top