What is stress in Tamil

மன அழுத்தம் என்றால் என்ன? | What is stress in Tamil

Spread the love

மன அழுத்தம் என்றால் என்ன (What is stress in Tamil) என்ற கேள்வி நம்மில் பலருக்கும் கண்டிப்பாக எழுந்திருக்கும். ஏனென்றால், தற்போதைய வாழ்க்கை முறையானது மிக அவசரமானதொன்றாக மாறிவிட்டது.

குடும்பம், வேலை, தேவைகள், பணம் போன்ற பல காரணிகளால் மன அழுத்தம் தினமும் உருவாகிக்கொண்டிருக்கிறது.

எனினும், நமது திறனை அறிந்துகொள்ளவும் முன்னேற்றத்தை நோக்கி செல்லவும் குறிப்பிட்டளவு மன அழுத்தம் தேவைப்படுகிறது.

இருப்பினும், அளவுக்கு அதிகமான மன அழுத்தம் என்பது மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்த காரணமாகவும் அமைகிறது.

சரி! வாருங்கள் இனி மன அழுத்தம் என்றால் என்ன (What is stress in Tamil) என்று விரிவாகப் பார்ப்போம்.

மன அழுத்தம் என்றால் என்ன? (What is stress in Tamil?)

மன அழுத்தம் (Stress in Tamil) என்பது குறிப்பிட்ட சூழ்நிலைகளை அல்லது சவால்களை சந்திக்கும் சந்தர்ப்பங்களில் அதை சமாளிக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியாமல் போகும் போது ஏற்படும் உள, உடல் ரீதியான மாற்றங்களே மன அழுத்தம் ஆகும்.

மன அழுத்தமானது பிரச்சினைகள் தோன்றும் போது பல புதிய விடயங்களை கற்றுக்கொடுக்கிறது.

உதாரணமாக நேர்மறையாக இருத்தல், விழிப்பாக இருத்தல், ஊக்கப்படுத்தல், கடுமையாக வேலை செய்ய தூண்டல் போன்றவாறான பல விடயங்களை புகற்றுகிறது.

இருந்தபொழுதிலும், மன அழுத்தம் விடுவிப்பின்றி அதிகரிக்கும் பொழுது அதுவே பெரிய பிரச்சினையாகிறது.

மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன? (What are the causes of stress in Tamil)

மன அழுத்தம் என்பது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு காரணங்களினால் ஏற்படலாம். மன அழுத்தமான நேரங்களில் மனிதர்கள் வெளிப்படுத்தும் விதம் ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும்.

மன அழுத்தம் பல காரணங்களால் ஏற்படலாம். எனினும், பொதுவாக மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்களை தற்போது பார்க்கலாம்.

  • மிக அதிகமாக கஷ்டப்பட்டு வேலை செய்தல்
  • பணப் பிரச்சினை
  • நேரப் பற்றாக்குறை
  • தொழிலில் பிரச்சினை
  • உறவுகளுக்குள் பிரச்சினை
  • குடுத்தில் ஏற்படும் குழப்பங்கள்
  • இழப்புகள்
  • உடல்நலக்குறைவு
  • மாற்றங்கள் நிகழ்தல்

இவ்வாறான பல காரணங்களால் மன அழுத்தம் ஏற்படலாம்.

இதில் முக்கியமான காரணம் என்னவென்றால், மன அழுத்தம் ஏற்படும் போது, அதற்கான காரணத்தை நன்கு அறிந்து, அதை உணர்ந்து செயற்படவேண்டும்.

இல்லையென்றால், அதுவே புதியதொரு பிரச்சினையை தோற்றுவிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

மன அழுத்தத்தின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of stress in Tamil)

மன அழுத்தம் ஏற்படும் போது மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பல அறிகுறிகளை வெளிக்காட்டும். அத்துடன், அது குறுகிய காலத்திற்கும் நிகழலாம், நீண்ட காலத்திற்கும் நிகழலாம்.

மன ரீதியான அறிகுறிகள்

  • திடீரென ஏற்படும் கவலை
  • ஒரு விடயத்தை செய்து முடிக்க முடியவில்லையே என்ற உணர்வு
  • மனதில் ஊக்கமின்மை
  • எரிச்சல் ஏற்படல்
  • சோகம் அல்லது மனச்சோர்வு ஏற்படல்
  • மனதை ஒருநிலைப்படுத்த முடியாமை
  • பாதுகாப்பு இல்லாதது போல் உணர்தல்
  • மறதி
  • நடத்தையில் மாற்றங்கள் ஏற்படல்
  • தாம்பத்தியத்தில் ஈடுபாடின்மை

உடல் ரீதியான அறிகுறிகள்

  • தூக்கமின்மை
  • அதிகளவு வியர்த்தல்
  • மயக்கம் ஏற்படுவது போன்ற தன்மை
  • அடிக்கடி நோய்வாய்படல்
  • உடம்பில் வலு குறைதல்
  • களைப்பாக (Fatigue) இருந்தல்
  • இதய துடிப்பு அதிகரித்தல்
  • உடலில் நடுக்கம் ஏற்படல்

மன அழுத்தம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் மேலே குறிப்பிட்டது போன்ற அறிகுறிகள் உங்களுக்கு தோன்றலாம். இது ஒரு சிறிய காலத்திற்கு ஏற்பட்டால் குறிப்பிடும் அளவுக்கு பாதிப்பு இருக்காது.

எனினும், இந்த நிலைமை தொடர்ந்தால் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனையை அனுகுவது சிறந்தது.

மன அழுத்தத்தின் வகைகள் யாவை? (What are the types of stress in Tamil)

மன அழுத்தத்தின் தன்மையை பொருத்து அதை மூன்று வகைகளாக (Mana aluthathin vagaigal) பிரிக்கலாம். அதேபோல எல்லா வகைகளும் எப்போதும் பாதிப்பை மாத்திரமே ஏற்படுத்தும் என கூற முடியாது.

கடுமையான மன அழுத்தம் (Acute Stress in Tamil)

இந்த வகை மன அழுத்தம் குறுகிய காலத்திற்கு ஏற்படும் மன அழுத்தமாகும். இது நேர்மறையாகவும் இருக்கலாம் அல்லது எதிர்மறையாகவும் இருக்கலாம்.

சில நேரங்களில் மிக வேதனை தரக்கூடிய அளவுக்கு கூட பாதிப்பை ஏற்படுத்தலாம். எனினும், இது சீக்கிரமே குறையக்கூடிய ஒரு மன அழுத்தமாகும்.

அதாவது, தினமும் அல்லது சமீபத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளின் அடிப்படையில் ஏற்பட்ட அல்லது அண்மை காலத்தில் முகம்கொடுக்கவிருக்கும் சவால்களினால் ஏற்பட்ட மன அழுத்தமாக இது இருக்கும்.

எனினும், இதைப்பற்றி பெரிதாக கவலைப்பட தேவையில்லை. காரணம் என்னவென்றால், சில நேரங்களில் இது நன்மையை ஏற்படுத்தும் மன அழுத்தமாகவும் கூட இருக்கலாம்.

இருந்தபோதிலும், இது அடிக்கடி நிகழக்கூடியது.

அடிக்கடி நிகழும் கடுமையான மன அழுத்தம் (Episodic Acute Stress in Tamil)

இது கடுமையான மன அழுத்தத்தின் அடிக்கடி நிகழும் நிகழ்வாகும். உதாரணமாக சொல்லப்போனால், செய்துமுடிக்க வேண்டிய செயற்பாடுகள் அடிக்கடி நிகழும் பொழுது,  அதனால் ஏற்படும் மன அழுத்தத்தை இது குறிக்கும்.

இவ்வகை மன அழுத்தத்தின் மூலம் உங்களுக்கு நிம்மதியான காலத்தை பெற முடியாமல் போகலாம்.

இந்த மன அழுத்தமானது உங்களது உடல், உள ரீதியான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.

நாட்பட்ட மன அழுத்தம் (Chronic Stress in Tamil)

உயர் மன அழுத்தம் நீண்ட நாட்களுக்கு இருக்குமாயின் அது நாட்பட்ட மன அழுத்தமாகும் (Chronic stress).

உங்களால் ஒரு பிரச்சினையை அல்லது சவாலை தீர்க்கவோ சமாளிக்கவோ முடியாமல் போகும் போது இவ்வழுத்தம் ஏற்படுகிறது. இதை அவ்வளவு எளிதில் நிவர்த்திசெய்ய முடியாமல் இருக்கும்.

இவ்வழுத்தம் நீடித்த நாட்கள் இருப்பதால் உடலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் பல நோய்கள் ஏற்படும்.

மன அழுத்தத்தின் விளைவுகள் யாவை? (What are the effects of stress in Tamil)

மன அழுத்தமானது குறுகிய காலத்திற்கு இருக்குமாயின் அதனால் பெரிய அளவுக்கு பாதிப்புகள் எதுவும் ஏற்படாது.

எனினும், அதுவே நீண்ட காலத்திற்கு தாக்குமாயின் பாரிய நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

மன அழுத்தத்தினால் ஏற்படும் விளைவுகளை (Effects of stress in Tamil) பார்க்கலாம்.

  • வயிற்றுப்போக்கு
  • சமிபாட்டுக் கோளாறுகள்
  • தலைவலி
  • கழுத்து மற்றும் தோலில் ஏற்படும் வலி
  • தசை வலி
  • உயர் குருதி அழுத்தம்
  • நீரிழிவு
  • முடி உதிர்தல்
  • இருதய நோய்கள்
  • பல் மற்றும் ஈரு நோய்கள்
  • மூல நோய்
  • நெஞ்சு வலி
  • தாம்பத்தியத்தில் உணர்ச்சிப் பிசகு

இவ்வாறான பல கடுமையான பின் விளைவுகள் ஏற்படும்.

மன அழுத்தம் என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் தினமும் முகம் கொடுக்கும் நிகழ்வுகளினால் ஏற்படும்.

மன அழுத்தம் உங்களது வாழ்வில் சாதாரணமாக ஏற்பட்டால் அதனால் எந்த பிரச்சினையும் இல்லை.

எனினும் அதை உங்களால் தீர்க்க முடியாமல் போகும் போது அதற்கான தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது சிறந்தது.

அந்நிலையில் மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணத்தை அடையாளம் கண்டு அதை நன்கு புரிந்து அதை முழுமையாக தீர்க்க வேண்டும்.

கட்டாயமாக வாசியுங்கள்: 

உங்களால் மன அழுத்தத்தின் பாதிப்பை கையாள முடியாமல் போகும் போது நீங்கள் நிச்சயமாக தகுந்த மருத்துவரை நாடி அதற்கான சிகிச்சையை முழுமையாக பெற வேண்டும்.

எப்போதும் மனதை அமைதியாக வைத்துக்கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம்.

இதையும் வாசிக்க: 

 

மற்றவர்களும் பயன்பெற இந்த கட்டுரையை பகிரவும். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *