இக்காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரும் ஒரு பொதுவான நோயாக பார்வை கோளாறு (Vision Disorder) உருவெடுத்து வருகிறது. டிஜிட்டல் சாதனங்களின் (Digital Devices) பாவணை அதிகரித்தமையே இதற்கு முக்கியமான காரணம் ஆகும்.
சிறுவர்களாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி அதிகமாக டிஜிட்டல் சாதனங்களுடன் தான் நாட்களை கழிக்கிறார்கள். இதனால் கண் பார்வை (Eye Vision) குறைபாட்டுடன் வேறு சில நோய்களுக்கும் உள்ளாகிறார்கள்.
இனி அவற்றை பற்றி விரிவாக பார்ப்போம்.
பொதுவாக மக்கள் காலையில் எழுந்ததிலிருந்து தொலைக்காட்சி பார்ப்பது, கணனியை பயன்படுத்துவது, ஸ்மார்ட்போன் மற்றும் டெப்லட் (Tablet) பயன்படுத்துவது, கேம்ஸ் விளையாடுவது போன்றவாறான விடயங்களை செய்கிறார்கள்.
இவ்வாறு அதிக நேரம் டிஜிட்டல் சாதனங்களுடன் இணைந்திருப்பது தான் பிரச்சினையே.
நமது கண்கள் தொலைவில் உள்ள பொருள்களை பார்க்கும் போது சாதாரணமாக எந்த கஷ்டத்தையும் உணராது.
எனினும், மிக அருகில் உள்ள பொருள்களை அதன் மீது உற்றுப் பார்க்கும் போது, (Focus) கண்கள் சற்று கஷ்டத்தை எதிர்நோக்குவதை அவதானித்திருப்பீர்கள்.
அதேபோல், இலத்திரனியல் திரையை பார்த்துக்கொண்டே இருக்கும் போது, கண்கள் தொடர்ந்து அதிலுள்ள விடயங்களை அவதானிக்க வேண்டிய ஒரு நிலைமை ஏற்படும்.
இந்நிலையில் நம் கண்கள் சோர்வாவதையும் ஆற்றல் குறைவதையும் நம்மால் உணர முடிகிறது.
இதனால் டிஜிட்டல் கண் திரிபிற்கு (Digital Eye Strain) உள்ளாகிறது நமது கண்கள்.
இளைஞர்கள் பொதுவாக இரவில் அதிகமாக ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவார்கள். டிஜிட்டல் சாதனங்களின் திரையிலிருந்து வரும் அதிக சக்தியை கொண்ட ஒளியானது நாட்கள் செல்ல செல்ல பார்வையை மோசமடையச் செய்யகூடும்.
மேலும், கணனியை அதிகம் பயன்படுத்துவதால் கண்களுடன் சம்பந்தப்பட்ட நோய்களும் வேறு சில நோய்களும் வரும்.
அவை யாவை என கீழே பார்க்கலாம்.
- கண் பார்வை மங்கல்
- விழி களைப்படைதல்
- தலைவலி
- கண் வறட்சி
- கழுத்து மற்றும் தோள்பட்டை வலி
- சோர்வு
- கவனம் செலுத்துவதில் சிரமம் போன்ற நோய்கள் ஏற்படும்.
தற்போதைய வேகமான வாழ்க்கை முறையில் டிஜிட்டல் சாதனங்களின் பங்களிப்பு இன்றியமையாத ஒன்றாகிவிட்டது.
எனினும், இவ்வகையான நோய்கள் ஏற்படும் போது, அதை பற்றி கவனம் செலுத்தாமல் இருப்பதும் உகந்ததல்ல.
ஆகவே, எவ்வாறு அதை நிவர்த்தி செய்யலாம் என பார்ப்போம்.
-
20-20-20 விதி
டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தும் போது 20 நிமிடத்திற்கு ஒரு முறை 20 செக்கன் அளவு ஓய்வை எடுப்பதோடு, குறைந்தது 20 அடி தூரம் உள்ள எதை வேண்டுமானாலும் பார்த்தல்.
-
கண் சிமிட்டல்
பொதுவாக டிஜிட்டல் பயன்பாட்டின் போது பயனர்கள் கண் சிமிட்டல் செய்வதை குறைக்க முனைவார்கள். ஏனென்றால், அச்சாதனத்தின் மீதான ஈடுபாடு அதிகமாக இருக்கும்.
ஆகவே, அடிக்கடி கண் சிமிட்டல் செய்வதால் கண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். அத்துடன், சிறிய ஓய்வும் கிடைக்கும்.
-
ஸ்மார்ட் சாதனங்களில் அமைப்புக்களை மாற்றல்
தற்போது உள்ள ஸ்மார்ட்போன்கள் மற்றும் டெப்லட் ஆகியவற்றில் ஒளி அளவை மாற்றக்கூடிய அமைப்புக்கள் கொடுக்கப்படுள்ளன.
அவற்றை சரியான முறையில் மாற்றி பயன்படுத்தல்.
-
டிஜிட்டல் சாதனத்திற்கும் கண்ணிற்குமான தூரம் அதிகரித்தல்
அதாவது, ஸ்மார்ட் சாதனங்கள் பயன்படுத்தும் போது கண்ணிற்கு மிக அருகில் வைத்து பயன்படுத்தாமல் சற்று தூரமாக வைத்து பயன்படுத்துதல் வேண்டும்.
குறிப்பாக, குறைந்தது 16-18 அங்குலங்களுக்கு அப்பால் ஸ்மார்ட்போனை வைத்து பயன்படுத்த வேண்டும்.
கணனி மற்றும் தொலைக்காட்சி பெட்டியை பார்க்கும் போது, அதிக தூர இடைவெளியில் பயன்படுத்த வேண்டும். இத்தூரம் கணனிக்கும் தொலைக்காட்சி பெட்டிக்கும் வேறுபடும்.
கணனியை பயன்படுத்தும் போது, கண்ணுக்கும் திரைக்குமான தூரம் குறைந்தது 20 அங்குலங்கள் இருக்க வேண்டும். அதேபோல, தொலைக்காட்சி பார்க்கும் போது, குறைந்தது 8 இலிருந்து 10 அடிக்கு அப்பால் இருந்து பார்க்கவேண்டும்.
-
ஒளிச்சாதனங்களை பயன்படுத்தல்
இரவு வேலையில் சூழல் ஒளியின் அளவு மிகக் குறைவாகவே இருக்கும்.
அந்நிலையில் உங்களுக்கு பின்னால் ஒரு மின்குமிழ் அல்லது ஒளியை பிறப்பிக்கும் எதாவது ஒரு சாதனத்தை ஒளிரச்செய்து, டிஜிட்டல் சாதனங்களை பயன் படுத்தல் வேண்டும்.
-
மூக்கு கண்ணாடி பயன்படுத்தல்
டிஜிட்டல் சாதனங்களிலிருந்து வெளியேறும் ஒளி அளவை குறைக்கும், எதிர் பிரதிபலிக்கும் கண்ணாடி அணிந்து சாதன திரையை பார்த்தல்.
இவை நாம் தினமும் கடைபிடிக்க வேண்டிய முறைகளாகும். எனினும், உங்களது பார்வையில் கோளாறு (Vision Disorder) ஏற்பட்டுள்ளதை அறிந்தால் அருகிலுள்ள சிறந்த கண் வைத்தியர் (Best Eye Doctor) ஒருவரை அணுகி கண் பரிசோதனை (Eye check up) செய்துகொள்வது மிக நல்லது.
ஏனென்றால், கண் பார்வையில் பிரச்சினை ஏற்பட்டால் வாழ்வே முடங்கிவிடும். ஆகவே, கண் பார்வையில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும்.
முக்கியமாக தெளிவான கண் பார்வைக்கு (Bright Vision) நமது உணவுப் பழக்கவழக்கங்களும் பங்கு வகிக்கின்றன என்று சொல்லலாம். ஆகவே, சரியான உணவுகளை தினமும் சேர்த்துக் கொள்வது நன்று.
மேலும் வாசிக்க:
- மரக்கறிகளில் உள்ள மருத்துவ குணங்கள்
- பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 10 வகையான உணவுகள்
டிஜிட்டல் சாதனங்களின் பாவணை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நமது பணிகளை சிரமம் இல்லாமல் இலகுவாக செய்துக்கொள்ள மிகவும் துணைபுரிகின்றன.
அவை இன்றி நடைமுறை வாழ்க்கையில் நமது வேளைகளை செய்வது என்பது மிக கடினமான ஒரு விடயம் தான்.
எனினும், என்னதான் அவற்றில் அதிக பயன்கள் இருந்தாலும், ஆபத்துக்களும் இருக்கின்றன.
அவற்றை அறிந்து அதற்கு ஏற்றவகையில் நாம் டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தவது சிறப்பாகும்.