நட்பே துணை
புதுமுக இயக்குநர் D.பார்த்திபன் தேசிங்கு என்பவரால் இயக்கப்பட்ட இப்படம் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட நகைச்சுவை படமாகும். இப்படத்தில் ஹிப் ஹொப் தமிழா ஆதி, அனகா, கரு பழனியப்பன், RJ விக்னேஷ்காந்த், பாண்டியராஜன், கௌசல்யா மேலும் பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு ஹிப் ஹொப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். அவ்னி மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் 4 ஆம் திகதி திரைக்கு வர உள்ளது.
குப்பத்து ராஜா
இது ஒரு ஆக்ஷனுடன் கலந்த நகைச்சுவை திரைப்படமாகும். இப்படத்தில் G.V பிரகாஷ் குமார், பார்த்திபன், பலாக் லல்வாணி, பூணம் பஜ்வா, M.S பாஸ்கர், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசை G.V பிரகாஷ் குமார் வழங்கியுள்ளார். படத்தை பாபா பாஸ்கர் இயக்க S ஃபோகஸ் (S Focus) எனும் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தொகுப்பு செய்துள்ளார் பிரவீன் K.L அவர்கள். இத்திரைப்படம் 5 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.
உறியடி 2
இப்படம் அரசியல் சார்ந்த ஆக்ஷன் த்ரில்லர் படமாகும். விஜய் குமார் இயக்கி நடித்திருக்கும் இப்படத்தை நடிகர் சூர்யாவின் 2D எண்டர்டெயிண்ட்மெண்ட் (2D Entertainment) நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் 2016 ஆம் ஆண்டு வெளியான உறியடி திரைப்படத்தின் 2 ஆம் பாகமாகும். மேலும் இப்படத்தில் விஸ்மயா, சுதாகர், சங்கர் தாஸ், அப்பாஸ் ஆகியோர் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசை வழங்கியுள்ளவர் கோவிந்த் வசந்த் என்பவராகும். இப்படமும் 5 ஆம் திகதி வெளியிடப்படயிருக்கிறது.
ஒரு கதை சொல்லட்டுமா
தமிழ் மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படம் இசையை பிண்ணனியாக வைத்து எடுத்த படமாகும். இப்படத்தில் முண்ணனி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஒலி வடிவமைப்பாளர் ரெசுல் பூக்குட்டி அவர்கள். இப்படத்தை பிரசாத் பிரபாகர் அவர்கள் இயக்கியுள்ளார். அதை ராஜீவ் பனாக்கல் என்பவர் தயாரித்திருக்கிறார். பாடல்களுக்கு ராஹுல் ராஜ் என்பவர் இசையமைத்துள்ளதோடு ஷர்ரெத் என்பவர் பிண்ணனி இசையை வழங்கியுள்ளார். இப்படமும் 5 ஆம் திகதி வெளிவருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீ
இப்படம் 12 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது. இது ஒரு அறிவியல் சார்ந்த த்ரில்லர் படமாகும். இயக்குநர் கலீஸினால் இயக்கப்பட்ட இப்படத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி, அனைகா சோடி, கோவிந்த் பத்மசூர்யா, RJ பாலாஜி, சுஹாசினி, மனோபாலா என்பவர்களுடன் மேலும் பலர் நடித்துள்ளார்கள். படத்தை S. மைக்கல் ராயப்பன் அவர்கள் தயாரித்துள்ளார். விஷால் சந்திரசேகர் என்பவர் இசையமைத்துள்ளார். க்லோபல் இன்போடெயிண்ட்மெண்ட் (Global Infotainment) எனும் நிறுவனம் தயாரித்துள்ளது. நகூரன் என்பவர் படத்தொகுப்பு செய்துள்ளார்.
தேவி 2
இயக்குநர் A.L விஜய் இயக்கியுள்ள இப்படத்தை K. கணேஷ் மற்றும் R. ரவிந்திரன் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். இது ஒரு இசை சார்ந்த திகில் நகைச்சுவை திரைப்படமாகும். முண்ணனி கதாபாத்திரத்தில் தமன்னா நடித்துள்ளதோடு பிரபுதேவா, நந்திதா ஸ்வேதா, ஜெகன் மற்றும் கோவை சரளா ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசை சேம் C.S. படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொண்டுள்ளார். ஒளிப்பதிவு வேலைகளை அனில் மேஹ்தா செய்துள்ளார். இப்படமும் 12 ஆம் திகதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ச்மேன்
G.V பிரகாஷ் குமார் இசையமைத்து, தானே முண்ணனி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை இயக்குநர் A.L விஜய் அவர்கள் இயக்கியிருக்கிறார். தயாரித்திருப்பது அருண் மொழி மாணிக்கமாகும். மேலும் சம்யுக்தா ஹெஜ்ட், ராஜ் அர்ஜுன் மற்றும் யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படமும் 12 ஆம் திகதி திரைக்கு வர இருக்கிறது. இது ஒரு த்ரில்லர் படமாகும்.
காஞ்சனா 3
இம்மாதம் வரும் படங்களில் பெருதும் எதிர்பார்க்கப்பட்ட படம் என்று இதை கூறலாம். ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள இப்படத்தை கலாநிதி மாறன் அவர்கள் தயாரித்துள்ளார். ஏறத்தாழ 40 கோடி இந்திய ரூபாய் மதிப்பில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இப்படத்தில் சத்யராஜ், ஓவியா, வேதிகா, கோவை சரளா, சூரி, கபீர் துஹான் சிங், நெடுமுனி வேனு, மனோபாலா, ஸ்ரீ்மன், தேவதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளார்கள். நகைச்சுவைக்கும் திகிலுக்கும் பஞ்சமே இருக்காது என்று தோன்றுகிறது. படத்தொகுப்பு பணிகளை ரூபன் மேற்கொள்ள ஒளிப்பதிவாளராக வெற்றி அவர்கள் பணியாற்றியுள்ளார். இப்படம் 19 ஆம் திகதி திரையிடப்படும்.
அயோக்யா
இது ஒரு ஆக்ஷன் படமாகும். அறிமுக இயக்குநர் வெங்கட் மோகனால் இயக்கப்பட்டுள்ளது. லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் (Light House Movie Makers) எனும் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஷால், சாஷி கண்ணா, R. பார்த்திபன், K.S ரவிக்குமார், தேவதர்ஷினி, வம்சி கிருஷ்ணா, பூஜா தேவாரியா மற்றும் மேலும் பலர் நடித்துள்ளார்கள். இசை வழங்கியுள்ளார் சேம் C.S அவர்கள். ஒளிப்பதிவு V.I கார்த்திக் அவர்கள் வழங்கியுள்ளார். இப்படமும் 19 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.