Smart Tamil Trend

Trending Now

Google Search

True details about Soorarai Pottru » சூரரைப் போற்று பற்றிய உண்மையான தகவல்கள்

சூரரைப் போற்று பற்றிய உண்மையான தகவல்கள்

Spread the love

சூர்யாவின் 38 வது திரைப்படமாக உருவாகி வருகிறது சூரரைப் போற்று. காப்பான் திரைப்படத்திற்கு பிறகு சூர்யா இப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இறுதி சுற்று புகழ் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். மேலும் சூர்யாவின் 2D Entertainment தயாரிப்பு நிறுவனமும் தயாரிப்பாளர் குணித் மோங்காவின் (Guneet Monga) Sikhya Entertainment நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன.

நடிகர்கள்

  • சூர்யா
  • அபர்ணா பாலமுரளி
  • கருணாஸ்
  • மோகன் பாபு
  • பரேஸ் ராவல்

மேலும் படிக்க:

இது எயார் டெகான் (Air Deccan) நிறுவுனரும், ஓய்வுபெற்ற இந்திய இராணுவ தலைவருமாகிய கெப்டன் ஜீஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

சூர்யா இயக்குநர் சுதா கொங்கராவுடன் இணைந்து பணியாற்றும் முதலாவது திரைப்படம் இதுவாகும். இவ்வருடம் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி படத்தின் பிரதானமான புகைப்படங்கள் எடுக்கும் பணிகள் ஆரம்பித்தன. அதே மாதம் 13 ஆம் திகதி படத்திற்கான பெயர் வைக்கப்பட்டது.

சுதா கொங்கரா, ஷாலினி உமாதேவி, ஆலிஃப் சுருதி, கணேஷா ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளார்கள். விஜய் குமார் என்பவர் படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார்.

படத்தின் ஒளிப்பதிவாளராக நிகேத் பொம்மிரெட்டி பணிபுரிகிறார். படத்தொகுப்பு பணிகளை சதிஷ் சூரியா மேற்கொள்கிறார். படத்தின் கலை இயக்குநராக ஜேக்கி தொழில்புரிகிறார்.

G.V பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இவர் சூர்யாவுடனும் சுதா கொங்கராவுடனும் இணைந்து பணியாற்றும் முதலாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

சூரரைப் போற்று டீசரிற்காக ஒரு சிறப்பான தீம் (Theme) ஐ இயக்கிக்கொண்டிருப்பதாகவும் அது “மாறா” என அழைக்கப்படும் எனவும் G.V பிரகாஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சினேகன், யுகபாரதி, விவேக், அருண்ராஜா காமராஜ், ஏகாதசி, மாயா மகாலிங்கம், அறிவு ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளார்கள். ஒலி உரிமைகளை சோனி மியுசிக் இந்தியா வாங்கியுள்ளது.

இப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 10 ஆம் திகதி வெளியாகியிருந்தது. இது சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்ற நிலையில் 1 மில்லியன் ட்வீட்களை கடந்துள்ளது என கருத்துக்கள் வெளியாகியுள்ளன. மேலும் தமிழ் சினிமாவில் அதிக ட்வீட்களை பெற்ற ஃபஸ்ட் லுக் எனும் பெறுமையை பெற்றுள்ளது எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இப்படத்தின் டீசர் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ட்ரெய்லர் பற்றிய எந்த கருத்தும் வெளியிடப்படவில்லை. திரைப்படம் 2020 ஆம் ஆண்டு ஏப்ரம் மாதம் திரைக்கு வருமென கூறப்பட்டுள்ளது.

நடிகர் விஜயின் தளபதி 64 உம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் தான் வெளியாகுமென செய்திகள் வெளியாகியுள்ளன. ஆகவே இவ்விரு படங்களுக்கிடையில் கடும் போட்டி நிலவும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

சூரரைப் போற்று திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெறுகின்றன.

படக்குழுவினருக்கு எமது முன்கூட்டிய வாழ்த்துக்கள்.


Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *