Skip to content

Smart Tamil Trend

Trending Now

Google Search

பில் கேட்ஸின் வாழ்க்கை வரலாறு | Life history of Bill Gates in Tamil

Life history of Bill Gates in Tamil
Spread the love

உலகில் பணக்காரர் யார் என்று கேட்டால் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருபவர் பில் கேட்ஸ் அவர்கள் தான். ஆம், பல வருடங்களாக உலக பணக்காரர் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்தவர் பில் கேட்ஸ் அவர்கள் ஆவார்.

பில் கேட்ஸ் (Bill Gates in Tamil) அவர்களின் முழுமையான பெயர் வில்லியம் ஹென்றி கேட்ஸ் த்ரீ (William Henry Gates III) ஆகும். அவர் அமெரிக்காவின் ஒரு சிறந்த தொழிலதிபர் ஆவார்.

மேலும், அவர் ஒரு சிறந்த முதலீட்டாளர், நூலாசிரியர், நன்கொடையாளர், மனித நலப்பற்றுடையவர் ஆவார்.

உலகில் பெரும்பாண்மையாக கணனிகளில் பயன்படுத்தப்படும் மென்பொருள்களை உருவாக்கிய மைக்ரோசொப்ட் (Microsoft) நிறுவனத்தின் முக்கிய ஸ்தாபகரும் ஆவார்.

இனி பில் கேட்ஸின் வாழ்க்கை வரலாறு (Life history of Bill Gates in Tamil) பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

Life history of Bill Gates in Tamil

Life history of Bill Gates in Tamil

பில் கேட்ஸின் ஆரம்ப வாழ்க்கை (Earlier life of Bill Gates in Tamil)

பில் கேட்ஸ் அவர்கள் 1955 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28 ஆம் திகதி அமெரிக்காவின் மேற்கு கடற்கரையோரப் பகுதியில் அமைந்துள்ள வாஷிங்டன் (Washington) மாநிலத்திலுள்ள சீட்ல் (Seattle) என்னும் நகரத்தில் பிறந்தார்.

அவரின் தந்தையின் பெயர் வில்லியம் எச் கேட்ஸ் (William H Gates) ஆகும். இவர் பிரசித்தி பெற்ற ஒரு வழக்கறிஞர் ஆவார்.

தாயாரின் பெயர் மேரி மெக்ஸ்வெல் கேட்ஸ் (Marry Maxwell Gates) ஆகும். இவர் ஃபஸ்ட் இண்டர்ஸ்டேட் பேங்க்சிஸ்டம் (First Interstate Bancsystem) மற்றும் யுனைடட் வே (United Way) ஆகிய நிறுவனங்களின் இயக்குனர் குழுவில் ஒருவராக பணிபுரிந்தவர் ஆவார்.

பில் கேட்ஸ் (Bill Gates in Tamil) அவர்களுக்கு க்ரிஸ்டி (Kristi) என்று ஒரு அக்காவும் லிப்பி (Lippy) என ஒரு தங்கையும் உண்டு.

பில் கேட்ஸ் தனது 13 வது வயதில் லேக்சைட் ஸ்கூல் (Lakeside School) எனும் தனியார் முதல்நிலைப்பள்ளியில் கல்வி கற்றார். இதன்போது, அவர் தனது முதலாவது மென்பொருள் நிரலை (Software Program) எழுதினார்.

பின்பு அப்பாடசாலையின் அன்னையர் சங்கமானது பாடசாலை மாணவர்களுக்காக டெலி டைப் மொடல் 33 ஏ.எஸ்.ஆர் (Teletype Model 33 ASR) எனும் அச்சு பொறியையும் (Printer) ஒரு கணனி தொகுதியையும் ஜெனரல் இலக்ட்ரிக் கம்பனி (General Electric Company) எனும் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்தது.

நிரலாக்கம் (Programming) மீது அதிக ஆர்வம் காட்டிய பில் கேட்ஸ் அவ்வியந்திரத்தை பயன்படுத்தி அவரது முதலாவது கணனி நிரலை (Computer Program) எழுதினார்.

அத்தோடு, கேட்ஸ் அவர்கள் மேலும் பல கணனி மொழிகளை தொடர்ந்து கற்றார்.

தனது 17 வது வயதில் அவர் தன் நண்பன் பால் எலன் (Paul Allen) உடன் இணைந்து ட்ரெஃப்-ஓ-டேட்டா (Traf-O-Data) என்கிற பாதையில் கடந்து செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகனங்களை கணக்கெடுக்கும் கருவியை உருவாக்கினார். இதற்கு இன்டெல் 8008 செயலி (Intel 8008 Processor) பயன்படுத்தப்பட்டது.

1972 ஆம் ஆண்டு கேட்ஸ் அவர்கள் அமெரிக்க சட்டமன்றத்துக்குறிய உதவி பிரதிநிதியாக (Congressional Page) பணிபுரிந்தார்.

மேலும், அவர் ஒரு தேசிய மெரிட் புலமைபரிசாளர் (National Merit Scholar) ஆவார். கல்லூரி கல்விக்குறிய தகுதிகான் பரீட்சையில் 1600 க்கு 1590 புள்ளிகளை பெற்று 1973 ஆம் ஆண்டு ஹார்வர்ட் கல்லூரியில் (Harvard College) இணைந்தார்.

அங்கு அவர் ஆரம்பத்தில் சட்டப்படிப்பை தெரிவுசெய்திருந்த போதிலும், கணிதம் மற்றும் பட்டதாரி நிலை கணனி விஞ்ஞான படிப்புகளை மேற்கொண்டார்.

எனினும், 2 வருடங்களுக்கு பிறகு அவர் ஹார்வர்ட் கல்லூரியிலிருந்து விலகினார்.

1975 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி பில் கேட்ஸ் அவரது நண்பர் பால் எலனுடன் இணைந்து மைக்ரோசொப்ட் (Microsoft) நிறுவனத்தை நிறுவினார்.

இக்காலத்தில் மைக்ரோ-சொப்ட் (Micro-soft) என பெயர் வைக்கப்பட்டிருந்த போதிலும், இடைக்குறி (Hypen) அகற்றப்பட்டு 1976 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி அதன் வர்த்தக பெயர் மைக்ரோசொப்ட் (Microsoft) என மெக்ஸிகோ மாநில செயலாளர் அலுவகத்தில் பதிவுசெய்யப்பட்டது.

பில் கேட்ஸ் (Bill Gates in Tamil) அவர்கள் அவரின் படிப்பை முடிப்பதற்கு மீண்டும் ஹார்வர்ட் கல்லூரிக்கு திரும்பவே இல்லை.

இக்காலத்தில் மைக்ரோ இன்ஸ்ட்ருமென்டேஷன் அண்ட் டெலிமெட்ரி சிஸ்டம்ஸ் (Micro Instrumentation and Telemetry Systems (MITS)) என்ற நிறுவனம் அல்டெயர் 8800 (Altair 8800) என்கிற கணனியை வெளியிட்டது.

தனது சொந்த மென்பொருள் கம்பனியை ஆரம்பிப்பதற்கான சரியான சந்தர்ப்பம் இது என கேட்ஸும் எலனும் நினைத்தார்கள்.

அல்டெயர் 8800 கணனியை பற்றி விளக்கி பொப்யூலர் இலக்ட்ரோனிக்ஸ் (Popular Electronics) என்கிற சஞ்சிகையில் வெளியிடப்பட்டிருந்ததை வாசித்த கேட்ஸ் அவர்கள், MITS ஐ தொடர்பு கொண்டு தானும் தனது குழுவும் பேசிக் நிரல் மொழியில் (BASIC Programming Language) வேலை செய்வதாக தெரிவித்தார்.

அதன்போது, MITS இன் தலைவராக இருந்த ஹென்றி எட்வர்ட் ரொபர்ட்ஸ் (Henry Edward Roberts) என்பவர் அவர்களை சந்திப்பதற்கு சம்மதம் தெரிவித்தார்.

இதற்கு பின்பு கேட்ஸ் மற்றும் எலன் ஆகியோரால் அல்டெயர் பேசிக் (Altair BASIC) என்ற மென்பொருள் வடிவமைக்கப்பட்டது. இம்மென்பொருள் கணனி பயன்படுத்துபவர்களிடத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது.

எனினும், அந்த மென்பொருளின் பிரதிகள் கசிவடைந்ததால் (Leak) கட்டணம் அறவிட முடியாமல் போனது. ஆகவே, கட்டணம் அறவிடுவதில் பிடிவாதமாக இருந்தார் கேட்ஸ் அவர்கள்.

அதன்பின் மைக்ரோசொப்ட் தனியாக இயங்க ஆரம்பித்தது. அதற்கு பின்பு பல வகையான மென்பொருள்களை உருவாக்கியது.

ஐபிஎம் உடன் கூட்டு சேர்தல் (IBM Partnership)

1980 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஐபிஎம் நிறுவனமானது தனது கணனிக்கு, ஒரு இயக்க முறைமை (Operating System) குறித்து மைக்ரோசொப்டினை அனுகியது.

ஐபிஎம் இன் பிரதிநிதிகள் தங்களது கணனிக்கு ஒரு இயக்க முறைமை தேவைப்படுகிறது என்று குறிப்பிட்டார்கள்.

அதற்கு கேட்ஸ் அவர்கள் சிபி/எம் (CP/M – Control Program for Microcomputers) இயக்க முறைமை தயாரிப்பாளர்களான டிஜிட்டல் ரிசேர்ச் இன்கோபரேடட் (Digital Research Incorporated) எனும் நிறுவனத்தை பரிந்துரை செய்தார்.

எனினும், ஐபிஎம் மற்றும் டிஜிட்டல் ரிசேர்ச் இன்கோர்பரேடட் உடனான கலந்துரையாடல் வெற்றியளிக்கவில்லை.

பிறகு ஐபிஎம் இன் வன்பொருள்களுக்கு உகந்த வகையில் உருவாக்கப்பட்ட சீட்ல் கம்பியூட்டர் ப்ரோடக்ட்ஸ் (Seattle Computer Products (SCP)) எனும் கம்பனியின் 86-டொஸ் (86-DOS) எனும் இயக்க முறைமையை கேட்ஸ் அவர்கள் பரிந்துரை செய்தார்.

அதன்போது, மைக்ரோசொப்ட், எஸ்சிபி உடன் ஒரு ஒப்பந்தம் செய்தது. அது என்னவென்றால், மைக்ரோசொப்ட் 86-டொஸ் இன் பிரத்தியேக உரிமையாளர் முகவராகவும், பின்னர் முழுமையான உரிமையாளர் ஆவதாகவும் ஒப்பந்தம் செய்தது.

அதன்பின்பு மைக்ரோசொப்ட் பிசீ டொஸ் (PC DOS) என்ற பெயருடன் ஐபிஎம் இற்கு அந்த இயக்க முறைமையை விநியோகம் செய்தது.

காலப்போக்கில் மைக்ரோசொப்டின் எம்எஸ் டொஸ் (MS DOS) ஆனது அதிகளவு விற்பனையாகி இயக்க முறைமை துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தது.

விண்டோஸ் (Windows)

1985 ஆம் ஆண்டு மைக்ரோசொப்ட் நிறுவனம் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி முதலாவது சில்லரை விண்டோஸ் பதிவை வெளியிட்டது.

அன்றிலிருந்து இன்று வரை வின்டோஸ் பதிப்புகள் புதிதாக்கப்பட்டு, இறுதியாக விண்டோஸ் 11 வெளியாகியுள்ளது.

பில் கேட்ஸின் பதவி மாற்றம் (Positions of Bill Gates in Tamil)

ஆரம்பத்தில் கேட்ஸ் மற்றும் பால் எலன் ஆகியோர் மைக்ரோசொப்ட் நிறுவனத்தை ஆரம்பித்திருந்தாலும் பில் கேட்ஸ் (Bill Gates in Tamil) அவர்கள் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) இருந்தார்.

பின்னர் 2000 ஆம் ஆண்டு தலைவராகவும் தலைமை மென்பொருள் வடிவமைப்பாளராகவும் இருந்தார்.

2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தான் மைக்ரோசொப்டில் பகுதிநேரமாக வேலை செய்வதாக அறிவித்தார் கேட்ஸ்.

2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தலைவராகவும் தொழிநுட்ப ஆலோசகராகவும் பணிபுரிய ஆரம்பித்தார்.

பில் கேட்ஸின் தொண்டு பணிகள் (Philanthropic works of Bill Gates in Tamil)

த கிவின் பிளெட்ஜ் (The Giving Pledge)

2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கேட்ஸ் மற்றும் வரேன் பப்பட் (Warren Buffett) ஆகியோரால் இந்த அறக்கட்டளை நிறுவனம் உருவாக்கப்பட்டது.

இது உலகிலுள்ள செல்வந்தர்கள் கொடை வழங்கலில் பங்களிப்பு செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட நிறுவனமாகும்.

2022 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் இதில் 28 நாடுகளிலிருந்து 236 அங்கத்தவர்கள் இருந்தனர்.

பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் (Bill and Melinda Gates Foundation)

இத்தொண்டு நிறுவனம் பில் கேட்ஸ் (Bill Gates in Tamil) மற்றும் அவரது முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸ் அகியோரால் ஆரம்பிக்கப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

இது 2000 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இது முக்கியமாக உலகளவில் வறுமையை போக்குவதற்காகவும் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்காவிலேயே பெரிய அறக்கட்டளை நிறுவனமாகும்.

தனிப்பட்ட நன்கொடைகள் (Personal contributions)

1999 ஆம் ஆண்டு மாசாசுசெட்ஸ் தொழிநுட்ப கல்வி நிலையத்திற்கு (Massachusetts Institute of Technology) 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியை வழங்கியுள்ளார்.

மேலும், ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் (Stanford University) கணனி விஞ்ஞான கட்டிடத்தின் கட்டுமானத்திற்காக 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளார்.

2018 ஆம் ஆண்டு இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கேட்ஸ் அண்ட் மெலிண்டா பவுண்டேஷன் ஊடாக 6 இலட்சம் அமெரிக்க டொலகளை கேட்ஸ் அவர்கள் நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.

பில் கேட்ஸின் தனிப்பட்ட வாழ்க்கை (Personal life of Bill Gates in Tamil)

கேட்ஸ் அவர்கள் மெலிண்டா ப்ரென்ச் (Melinda French) அவர்களை 1994 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதி திருமணம் செய்தார்.

இத்தம்பதியருக்கு ஜெனீபர் கெதரீன் (Jennifer Katharine) மற்றும் பொஎப் அடெல் (Phoebe Adele) என 2 மகள்களும் ரோரி ஜோன் (Rory John) என 1 மகனும் உண்டு.

எனினும் கேட்ஸ் மற்றும் மெலிண்டா ப்ரென்ச் ஆகிய இருவரும் கல்யாண வாழ்க்கையிலிருந்து பிரிந்துவிட்டார்கள். இவர்களது விவாகரத்து 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி முடிவுக்குக்கொண்டுவரப்பட்டது.

கேட்ஸின் இல்லம் வாஷிங்டனின் மெடினாவில் (Medina, Washington) உள்ள வாஷிங்டன் ஏரிக்கருகில் அமைந்துள்ளது. இவ்வீட்டு தோட்டமானது 66,000 சதுர அடி பரப்பை கொண்டது.

இதில் நீருக்கடியில் இசை அமைப்புடன் கூடிய 60 அடி நீளமான நீச்சல் தடாகம் ஒன்று உள்ளது. மேலும், இவ்வீட்டில் 2,500 சதுர அடி கொண்ட ஜிம்மும் (Gym) 1,000 சதுர அடி கொண்ட சாப்பாட்டு அறையும் உண்டு.

பில் கேட்ஸ் (Bill Gates in Tamil) அவர்கள் 2022 இன் உலக பணக்காரர்கள் வரிசையில் 4 ஆம் இடத்தில் உள்ளார். அதன்படி, அவரது சொத்து மதிப்பு 129 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

இதையும் வாசியுங்கள்:

பில் கேட்ஸின் வாழ்க்கை வரலாறு (Life history of Bill Gates in Tamil) பற்றி நாம் தற்போது பார்த்தோம்.

அவர் பணத்தில் மட்டும் செல்வந்தர் அல்ல. உண்மையிலேயே குணத்திலும் ஒரு செல்வந்தர் என்றே கூறலாம். தன் விடா முயற்சியால் உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்து ஒரு வெற்றி  பெற்ற மாமனிதர் ஆவார் பில் கேட்ஸ்.


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *