Smart Tamil Trend

Trending Now

Google Search

IPL Final 2022

ஐபிஎல் இறுதிப் போட்டி 2022: 7 விக்கெட்டுகளால் வென்றது குஜராத் டைடான்ஸ்

Spread the love

2022 இற்கான ஐபிஎல் இறுதிப் போட்டி (IPL Final 2022) மே மாதம் 29 ஆம் திகதியான நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் குஜராத் டைடான்ஸ் (Gujarat Titans) அணியும் ராஜஸ்தான் ரோயல்ஸ் (Rajasthan Royals) அணியும் ஒன்றுடன் ஒன்று மோதின.

இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர போடி விளையாட்டு மைதானத்தில் இரவு போட்டியாக நடைபெற்றது.

இந்த போட்டியில் போட்டி நடுவர்களாக களத்தில் நிதின் மேனன் (Nitin Menon) மற்றும் க்ரிஸ் கஃபேனி (Chris Gaffaney) ஆகியோர் பணியாற்றினார்கள். அதேபோல, 3 வது நடுவராக KN ஆனந்தபத்மனாபன் (KN Ananthapadmanabhan) செயற்பட்டார்.

IPL Final 2022
IPL Final 2022

 

அணி வீரர்களின் விபரங்கள்

ராஜஸ்தான் ரோயல்ஸ் (Rajasthan Royals)

  1. யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal)
  2. ஜோஸ் பட்லர் (Jos Buttler)
  3. சஞ்சு சம்சன் (Sanju Samson)
  4. தேவ்தத் படிக்கல் (Devdutt Padikkal)
  5. ஷிம்ரோன் ஹெட்மியர் (Shimron Hetmyer)
  6. ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin)
  7. ரியான் பராக் (Riyan Parag)
  8. ட்ரெண்ட் போல்ட் (Trent Boult)
  9. ஒபேட் மெகோய் (Obed Mccoy)
  10. ப்ரசித் கிரிஷ்ணா (Prasidh Krishna)
  11. யுஸ்வேந்திர சஹால் (Yuzvendra Chahal)

 

குஜராத் டைடான்ஸ் (Gujarat Titans)

  1. வ்ரித்திமன் சாஹா (Wriddhiman Saha)
  2. சுப்மன் கில் (Shubman Gill)
  3. மேத்திவ் வாட் (Matthew Wade)
  4. ஹார்டிக் பாண்டியா (Hardik Pandya)
  5. டேவிட் மில்லர் (David Miller)
  6. ராகுல் தேவாதியா (Rahul Tewatia)
  7. ரஷித் கான் (Radhid Khan)
  8. சாய் கிஷோர் (Sai Kishore)
  9. முகம்மது ஷமி (Mohammad Shami)
  10. லோகி ஃபெர்குசன் (Lockie Ferguson)
  11. யாஸ் தயால் (Yash Dayal)

 

இவ்விரு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற நாணய சுழற்சியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி பெற்று, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அந்தவகையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லெர் ஆகியோர் முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்தனர்.

முதலாவது விக்கெடாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியின் ஓட்ட எண்ணிக்கை 31 ஆக இருந்தபோது, 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து களமிறங்கிய சஞ்சு சம்சன் 14 ரன்களுடன் சாய் கிஷோரிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

3 வது விக்கெட்டாக தேவ்தத் படிக்கல் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, ஜோஸ் பட்லர் 4 வது விக்கெட்டாக 39 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் ஷிம்ரோன் ஹெட்மியர் களத்திற்கு வந்தார். அவர் 11 ரன்களுடன் ஹார்டிக் பாண்டியாவின் பந்திற்கு அவரிடமே பிடி கொடுத்து வெளியேறினார்.

அணியின் ஓட்ட எண்ணிக்கை 98 ஆக இருந்த வேளையில், ரவிச்சந்திரன் அஸ்வின் 6 ஓட்டங்களுடன் 6 வது விக்கெடாக ஆட்டமிழந்து சென்றார்.

7 வது விக்கெட்டாக ட்ரெண்ட் போல்ட் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததோடு, 8 வது விக்கெட்டாக ஒபேட் மெகோய் 8 ரன்களுடன் வெளியேறினார்.

இறுதி விக்கெட்டாக ரியான் பராக் 15 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டமிழந்தார்.

ப்ரசித் கிரிஷ்ணா எந்த ஓட்டமும் பெறவில்லை. அதன்படி ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் மொத்தமாக 130 ஓட்டங்களை 20 ஓவர்கள் முடிவில் பெற்றது.

ஹார்டிக் பாண்டியா 4 ஓவர்கள் பந்து வீசி 17 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல, சாய் கிஷோர் 2 ஓவர்கள் வீசி 20 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை பெற்றார்.

முகம்மது ஷமி, யாஷ் தயால், ரஷித் கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டை பெற்றனர். லோகி ஃபெர்குசன் 3 ஓவர்கள் வீசி 22 ஓட்டங்களை கொடுத்ததுடன், எந்த விக்கெட்டையும் பெறவில்லை.

பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய குஜராத் டைடான்ஸ் அணியின் முதல் விக்கெட்டாக வ்ரித்திமன் சாஹா 5 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

2 வது விக்கெட்டாக மேத்திவ் வாட் 8 ரன்களுடன் ஆட்டமிழந்து சென்ற அதேவேளை, ஹார்டிக் பாண்டியா 34 ஓட்டங்கள் பெற்றிந்த போது யஷஸ்வி ஜெய்ஸ்வாலிடம் பிடி கொடுத்து 3 வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

அதனடிப்படையில், 18.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 133 ரன்களை பெற்று 7 விக்கெட்டுகளால் குஜராத் டைடான்ஸ் அணி வெற்றியை தனதாக்கிக்கொண்டது.

பந்து வீச்சில் ஈடுபட்ட ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ட்ரெண்ட் போல்ட், ப்ரசித் கிரிஷ்ணா, யுஸ்வேந்திர சஹல் ஆகியோர் தலா 1 விக்கெட்டை பெற்றிருந்தனர்.

அதேபோல, ஒபேட் மெகோய், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய இருவரும் எந்த விக்கெட்டையும் பெறவில்லை.

அந்தவகையில் 2022 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிண்ணத்தை குஜராத் டைடான்ஸ் அணி வென்றது. இந்த அணி போட்டியிட்ட முதலாவது தடவையிலேயே ஐபிஎல் கிண்ணத்தை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் ஆட்ட நாயகனாக ஹார்டிக் பாண்டியா தெரியுசெய்யப்பட்டார்.

குஜராத் டைடான்ஸ் அணிக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

இதையும் வாசிக்க: 

 


Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *