உங்கள் அனைவருக்கும் யூடியுப் (YouTube) பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும். கண்டிப்பாக தினமும் இந்த யூடியுப்பை பயன்படுத்தாமல் இருக்கவேமாட்டீர்கள். யூடியுப்பில் பணம் சம்பாதிக்க முடியுமா? ஆம்! கண்டிப்பாக முடியும். அவ்வாறு யூடியுப்பில் அதிகமாக சம்பாதிக்கும் (Highest earning kids) இரண்டு சிறுவர்களை பற்றி இனி விரிவாக பார்ப்போம்.
முதலில் ஒரு விடயத்தை பற்றி சொல்ல வேண்டும். வருடா வருடம் உலக பணக்காரர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்பது பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதை ஃபோர்ப்ஸ் (Forbes) எனும் அமெரிக்க வணிக சஞ்சிகை (American Business Magazine) தான் வெளியிடும்.
அச்சஞ்சிகையை சேர்ந்தவர்கள் ஒவ்வொரு வருடமும் அதற்கான பட்டியலை தயார் செய்து வெளியிடுவார்கள்.
அவ்வாறு வெளியிடும் போது சில பிரிவுகளிலும் (Category) வெளியிடுவார்கள். அந்தவகையில் யூடியுப்பில் அதிகமாக சம்பாதிப்பவர்கள் பற்றிய பட்டியலையும் வெளியிடுவார்கள்.
அந்த பட்டியலில் இடம்பெற்ற அதிகமாக சம்பாதிக்கும் சிறுவர்கள் (Highest earning kids) இருவர் பற்றித் தான் தற்போது பார்க்கப்போகிறோம்.
ரையன் காஜி (Ryan Kaji)

Ryan Kaji
ஆரம்பம்
இந்த சிறுவன் 2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6 ஆம் திகதி பிறந்துள்ளார். தற்போது அமெரிக்காவில் டெக்சாஸ் (Texas, America) மாநிலத்தில் வசிக்கிறார். அதன்படி, இச்சிறுவனின் தற்போதைய வயது 11 மட்டுமே ஆகிறது.
இச்சிறுவன் 4 வயதாக இருந்தபோது யூடியுப்பில் விளையாட்டு பொருட்களை பற்றி விபரிக்கும் சேனல்களை பார்த்துள்ளார்.
அவற்றை பார்த்த இச்சிறுவன் தனது அம்மாவை பார்த்து “மற்ற எல்லா குழந்தைகளும் இருக்கும்போது நா எப்படி யூடியுப்பில் இல்லை” என கேட்டுள்ளார்.
அவரின் தாயாரின் பெயர் லோன் காஜி (Loann Kaji). இவர் ஒரு இராயணவியல் ஆசிரியையாவார்.
தனது மகன் அவ்வாறு ஒரு கேள்வியை கேட்டதால் தான் செய்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுநேரமாக யூடியுப்பில் பணிபுரிய ஆரம்பித்தார்.
அதன் பின்பு, 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அவர்களது முதலாவது யூடியுப் சேனலை ரையன்ஸ் வேர்ல்ட் (Ryan’s World) எனும் பெயரில் உருவாக்கினார்கள். இவர்கள் தனது சேனலில் விளையாட்டு பொருட்களை விபரிக்கும் வீடியோக்களை பதிவேற்றம் (Upload) செய்துகொண்டிருக்கிறார்கள்.
தற்போது, அச்சிறுவனின் அம்மாவான லோன் காஜி, அப்பாவான ஷியோன் காஜி (Shion Kaji), இரட்டை சகோதரிகளான எம்மா (Emma) மற்றும் கேட் (Kate) ஆகியோர் இணைந்து வீடியோக்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
2017 ஆம் ஆண்டு ரையனின் பெற்றோர் பொகெட்வாட்ச் (PocketWatch) எனும் சிறுவர்களுக்கான ஊடக நிறுவனமொன்றுடன் கைச்சாத்திட்டார்கள். அந்நிறுவனமானது ரையனின் யூடியுப் சேனல்களை சந்தைப்படுத்தல் (Marketing) செய்கிறது.
அதுமட்டுமின்றி, அந்த நிறுவனம் அச்சிறுவனின் பெயரில் நிறைய விளையாட்டுகள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் என்பனவற்றையும் செய்துகொண்டிருக்கிறது.
காஜி குடும்பத்தினரின் பிரதானமான சேனல் ரையன்ஸ் வேர்ல்ட் ஆகும். அது இல்லாமல் தற்போது மேலும், 9 யூடியுப் சேனல்களை நடித்திக்கொண்டிருக்கிறார்கள். அவற்றில் 2 சேனல்களில் ஆங்கிலம் அல்லாத 2 மொழிகளில் டப் செய்யப்பட்டு வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
ரையன் வேர்ல்ட் யூடியுப் சேனலை பார்வையிட இங்கே க்ளிக் செய்யவும்.
சரி, இப்போது இச்சிறுவனின் வருமானத்தைப் பற்றி பார்க்கலாம்.
வருமான விபரம்
2016, 2017 ஆண்டுக்கு இடையில் ரையன் 11 மில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்துள்ளார். அச்சமயம் உலக யூடியுப் பணக்காரர்கள் பட்டியலில் 8 வது இடத்தில் இருந்தார்.
தொடர்ந்து படிப்படியாக முன்னேறி, 2018 ஆம் ஆண்டு 22 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் 2019 ஆம் ஆண்டு 26 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் சம்பாதித்துள்ளார்.
அதேபோல, 2020 ஆம் ஆண்டு 29.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்த இச்சிறுவன் கடந்த வருடம் 27 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக பெற்றுள்ளார்.
2018, 2019, 2020 ஆகிய 3 வருடங்களும் தொடர்ந்து உலக யூடியுப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்த சிறுவன் கடந்த வருடம் 7 வது இடத்திற்கு பின் தள்ளப்பட்டார்.
ரையனின் அனைத்து சேனல்களினதும் மொத்த சப்ஸ்க்ரைபர்கள் எண்ணிக்கை 52.93 மில்லியன் (21-05-2022) ஆகும். அதேபோல, இவை அனைத்தும் இதுவரை மொத்தமாக 70 பில்லியனுக்கு (21-05-2022) அதிகமான வீவ்ஸ்களை பெற்றுள்ளன.
அடுத்து நாம் ஒரு சிறுமியை பற்றிப் பார்ப்போம்.
நஸ்டியா (Nastya)

Anastasia Radzinskaya
ஆரம்பம்
சுருக்கமாக நஸ்டியா என அழைக்கப்படும் இந்த சிறுமியின் முழுப்பெயர் அனஸ்டேசியா ராட்சின்ஸ்கயா (Anastasia Radzinskaya) ஆகும்.
இச்சிறுமி 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் திகதி தென் ரஷ்யாவின் க்ராஸ்னொடார் க்ராய் (Krasnodar Krai) எனும் இடத்தில் பிறந்துள்ளார். ஆகவே, தற்போது இந்த சிறுமியின் வயது 8 ஆகும்.
இந்த சிறுமியின் அம்மாவின் பெயர் அனா ராட்சின்ஸ்கயா (Anna Radzinskaya) ஆகும். இவர் ஒரு மணப்பெண் அலங்கார நிலையமொன்றை நடத்தி வந்துள்ளார். சிறுமியின் தந்தை சேர்கே ராட்சின்ஸ்கிஜ் (Sergey Radzinskij) ஒரு கட்டுமான நிறுவனமொன்றை நடத்தியுள்ளார்.
இருவரும் மாதா மாதம் நல்ல வருமானத்தை பெற்று வந்துள்ளனர். அவ்வாறு இருந்தபோதிலும், 2015 இல் இருவரும் தனது நிறுவனங்களை விலைக்கு விற்றுவிட்டார்கள்.
விற்ற பின் 2016 இல் லைக் நஸ்டியா (Like Nastya) எனும் யூடியுப் சேனலை உருவாக்கியுள்ளார்கள். ஆரம்பத்தில் விளையாட்டு பொருட்களை விபரித்து விடியோக்களை பதிவேற்றம் செய்து வந்தார்கள்.
ஆனால், போக போக வெளிநாடுகளில் உள்ள பொழுதுபோக்கு பூங்காகளுக்கு சென்று வீடியோக்களை பதிவுசெய்து பதிவேற்றம் செய்திருக்கிறார்கள்.
இந்த சேனலை ஆரம்பித்து 7 மாதத்திற்குள் 6 நாடுகளுக்கு விஜயம் செய்துள்ளார்கள்.
இவர்கள் ஆரம்பத்தில் இவர்களது சேமிப்பில் இருந்து 1 லிருந்து 1 ½ மில்லியன் ரஷ்ய ரூபிள்களை (Russian Rubles) வீடியோக்கள் தயாரிப்பிற்காக செலவிட்டுள்ளார்கள்.
கொஞ்ச நாளைக்கு பிறகு சேனல் மூலமாக நல்ல வருமானம் வர தொடங்கியுள்ளது.
தற்போது இவர்கள் பல மொழிகளில் டப் செய்து வீடியோக்களை பதிவேற்றம் செய்கிறார்கள்.
தற்சமயம், இந்த குடும்பம் அமெரிக்காவின் மியாமி (Miami, America) எனும் நகரத்தில் வசித்து வருகிறது.
லைக் நஸ்டியா யூடியுப் சேனலை பார்வையிட இங்கே க்ளிக் செய்யவும்.
வருமான விபரம்
2019 ஆம் ஆண்டு இந்த சிறுமி 18 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக பெற்றுள்ளார். 2020 ஆம் ஆண்டு 18.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்திருக்கிறார். கடந்த வருடம் இச்சிறுமி 28 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருவாயாக பெற்றிருக்கிறார்.
அதன் அடிப்படையில் 2019 ஆம் ஆண்டில் உலக யூடியுப் பணக்காரர்கள் பட்டியலில் 3 ஆம் இடத்தில் இருந்தார். 2020 ஆம் ஆண்டு 7 ஆம் இடத்திற்கு பின் தள்ளப்பட்ட இவர் கடந்த வருடம் மீண்டும் முன்னேறி 6 வது இடத்திற்கு வந்துள்ளார்.
தற்போது இச்சிறுமியின் அனைத்து யூடியுப் சேனல்களின் மொத்த சப்ஸ்க்ரைபர்கள் பற்றி பார்ப்போம். இச்சிறுமிக்கு மொத்தமாக 11 சேனல்கள் உண்டு. மொத்தமாக இவர் 274.52 மில்லியன் (21-05-2022) சப்ஸ்க்ராபர்களை கொண்டிருக்கிறார்.
இச்சேனல்கள் அனைதும் மொத்தமாக 160 பில்லியனுக்கும் (21-05-2022) அதிகமான வீவ்ஸ்களை பெற்றுள்ளன.
லைக் நஸ்டியா சேனல் ஆனது உலகத்தில் அதிகமாக பார்க்கப்பட்ட சேனல்கள் அட்டவணையில் 5 வது (21-05-2022) இடத்தில் உள்ளது. அதேபோல், உலகத்தில் அதிக சப்ஸ்க்ரைபர்களை கொண்ட சேனல்கள் பட்டியலில் 7 வது (21-05-2022) இடத்தில் உள்ளது.
இந்த 2 குழந்தைகளின் ஆர்வத்தினாலும், அவர்களின் பெற்றோர்களின் முயற்சியினாலும் இவர்கள் யூடியுப்பில் சாதித்துள்ளார்கள். அதுமட்டுமன்றி, யூடியுப்பில் அதிகமாக சம்பாதிக்கும் சிறுவர்கள் (Highest earning kids) எனும் பெருமையும் இவர்களுக்கு கிடைத்துள்ளது. இவர்களின் பெற்றோர்கள் மிகவும் அதிஷ்டசாலிகள் என்றே கூறவேண்டும்.
அந்த குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் அவர்களின் தயாரிப்பு குழுக்களுக்கும் எமது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இதையும் வாசிக்க: