கிரிக்கெட் உலகில் மிக முக்கியமான போட்டிகளில் ஒன்று இருபதுக்கு இருபது உலகக் கிண்ண (Twenty20 World Cup (T20)) போட்டியாகும்.
2021 இற்கான உலக கிண்ண T20 போட்டிகளானது உலக கிண்ண இருபதுக்கு இருபது போட்டி வரிசையில் நடக்கும் 7 வது போட்டிகளாகும்.
இப்போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இப்போட்டிகளில் 16 அணிகள் பங்குகொள்கின்றன.
அத்துடன், 45 போட்டிகள் நடக்கவிருக்கின்றன.
அவற்றில் நமீபியா (Namibia) மற்றும் பப்புவா நியூ கினியா (Papua New Guinea) ஆகிய அணிகள் உலக கிண்ண T20 போட்டிகளில் இம்முறை முதல் முறையாக பங்குபற்றுகின்றன.
2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை இதற்கு முந்தைய உலக கிண்ண இருபதுக்கு இருபது போட்டி நடக்கவிருந்து.
2020 இல் ஜூலை மாதம் சர்வதேச கிரிக்கெட் சபையானது (International Cricket Council (ICC)) கொவிட் 19 பரவல் காரணமாக பிற்போடப்பட்டுள்ளது என அறிவித்தது.
2021 ஆம் ஆண்டு இந்தியாவில் நடத்துவதற்கும் 2022 இற்கான உலக கிண்ண போட்டிகளை அவுஸ்திரேலியாவில் நடத்தவும் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்டில் ICC உறுதிசெய்தது.
எது எவ்வாறாக இருப்பினும், கொவிட் 19 பரவல் அதிகரித்ததன் காரணத்தால் 2021 இற்கான போட்டிகளானது ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளதாக 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ICC அறிவிப்புவிடுத்தது.
அதன் பின், 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை போட்டிகள் அட்டவணைப்படுத்தபட்டன.
எனினும், போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் மட்டுமன்றி ஓமானிலும் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
பங்குகொள்ளும் அணிகள் பற்றிய விபரங்கள்
நிலை |
அணி |
1 |
இந்தியா |
2 |
பாகிஸ்தான் |
3 |
அவுஸ்திரேலியா |
4 |
இங்கிலாந்து |
5 |
தென் ஆபிரிக்கா |
6 |
நியூசிலாந்து |
7 |
மேற்கிந்திய தீவுகள் |
8 |
ஆப்கானிஸ்தான் |
9 |
இலங்கை |
10 |
வங்காளதேசம் |
11 |
நெதர்லாந்து |
12 |
பப்புவா நியூ கினியா |
13 |
அயர்லாந்து |
14 |
நமீபியா |
15 |
ஸ்கொட்லாந்து |
16 |
ஓமான் |
போட்டிகள் நடக்கவிருக்கும் மைதானங்கள்
ஐக்கிய அரபு இராச்சியம் |
||
மைதானம் |
இடம் |
இருக்கைகள் |
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம்
(Dubai International Cricket Stadium) |
துபாய் |
25,000 |
ஷார்ஜா கிரிக்கெட் மைதானம்
(Sharjah Cricket Stadium) |
ஷார்ஜா |
27,000 |
ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானம்
(Sheikh Zayed Cricket Stadium) |
அபுதாபி
(Abu Dhabi) |
20,000 |
ஓமான் |
||
மைதானம் |
இடம் |
இருக்கைகள் |
ஓமான் கிரிக்கெட் கழக மைதானம்
(Oman Cricket Academy Ground ) |
மஸ்கட்
(Muscat) |
3,000 |
முதல் சுற்று
குழு A அணிகள் மற்றும் போட்டிகள்
- அயர்லாந்து
- நமீபியா
- நெதர்லாந்து
- இலங்கை
திகதி |
நேரம் |
அணிகள் |
||
18-10-2021 |
15:30 | அயர்லாந்து | V |
நெதர்லாந்து |
18-10-2021 |
19:30 | இலங்கை | V |
நமீபியா |
20-10-2021 |
15:30 | நமீபியா | V |
நெதர்லாந்து |
20-10-2021 |
19:30 | இலங்கை | V |
அயர்லாந்து |
22-10-2021 |
15:30 | நமீபியா | V |
அயர்லாந்து |
22-10-2021 |
19:30 | இலங்கை | V |
நெதர்லாந்து |
குழு A இல் வெற்றி பெறும் முதல் இரு அணிகள் முறையே A1, A2 என கொள்ளப்படும்.
குழு B அணிகள் மற்றும் போட்டிகள்
- வங்காளதேசம்
- ஓமான்
- பப்புவா நியூ கினியா
- ஸ்கொட்லாந்து
திகதி |
நேரம் |
அணிகள் |
||
17-10-2021 |
15:30 | ஓமான் | V |
பப்புவா நியூ கினியா |
17-10-2021 |
19:30 | வங்காளதேசம் | V |
ஸ்கொட்லாந்து |
19-10-2021 |
15:30 | ஸ்கொட்லாந்து | V |
பப்புவா நியூ கினியா |
19-10-2021 |
19:30 | ஓமான் | V |
வங்காளதேசம் |
21-10-2021 |
15:30 | வங்காளதேசம் | V |
பப்புவா நியூ கினியா |
21-10-2021 |
19:30 | ஓமான் | V |
ஸ்கொட்லாந்து |
குழு B இல் வெற்றி பெறும் முதல் இரு அணிகள் முறையே B1, B2 என கொள்ளப்படும்.
சூப்பர் 12
குழு 1 அணிகள் மற்றும் போட்டிகள் பற்றிய விபரங்கள்
- அவுஸ்திரேலியா
- இங்கிலாந்து
- தென் ஆபிரிக்கா
- மேற்கிந்திய தீவுகள்
- A1
- B2
திகதி |
நேரம் |
அணிகள் |
||
23-10-2021 |
15:30 | அவுஸ்திரேலியா | V |
தென் ஆபிரிக்கா |
23-10-2021 |
19:30 | இங்கிலாந்து | V |
மேற்கிந்திய தீவுகள் |
24-10-2021 |
15:30 | A1 | V |
B2 |
26-10-2021 |
15:30 | தென் ஆபிரிக்கா | V |
மேற்கிந்திய தீவுகள் |
27-10-2021 |
15:30 | இங்கிலாந்து | V |
B2 |
28-10-2021 |
19:30 | அவுஸ்திரேலியா | V |
A1 |
29-10-2021 |
15:30 | மேற்கிந்திய தீவுகள் | V |
B2 |
30-10-2021 |
15:30 | தென் ஆபிரிக்கா | V |
A1 |
30-10-2021 |
19:30 | இங்கிலாந்து | V |
அவுஸ்திரேலியா |
01-11-2021 |
19:30 | இங்கிலாந்து | V |
A1 |
02-11-2021 |
15:30 | தென் ஆபிரிக்கா | V |
B2 |
04-11-2021 |
15:30 | அவுஸ்திரேலியா | V |
B2 |
04-11-2021 |
19:30 | மேற்கிந்திய தீவுகள் | V |
A1 |
06-11-2021 |
15:30 | அவுஸ்திரேலியா | V |
மேற்கிந்திய தீவுகள் |
06-11-2021 |
19:30 | இங்கிலாந்து | V |
தென் ஆபிரிக்கா |
குழு 1 இல் வெற்றி பெறும் முதல் இரு அணிகள் முறையே G1A1, G1B1 என கொள்ளப்படும்.
குழு 2 அணிகள் மற்றும் போட்டிகள் பற்றிய விபரங்கள்
- ஆப்கானிஸ்தான்
- இந்தியா
- நியூசிலாந்து
- பாகிஸ்தான்
- A2
- B1
திகதி |
நேரம் |
அணிகள் |
||
24-10-2021 |
19:30 | இந்தியா | V |
பாகிஸ்தான் |
25-10-2021 |
19:30 | ஆப்கானிஸ்தான் | V |
B1 |
26-10-2021 |
19:30 | பாகிஸ்தான் | V |
நியூசிலாந்து |
27-10-2021 |
19:30 | B1 | V |
A2 |
29-10-2021 |
19:30 | ஆப்கானிஸ்தான் | V |
பாகிஸ்தான் |
31-10-2021 |
15:30 | ஆப்கானிஸ்தான் | V |
A2 |
31-10-2021 |
19:30 | இந்தியா | V |
நியூசிலாந்து |
02-11-2021 |
19:30 | பாகிஸ்தான் | V |
A2 |
03-11-2021 |
15:30 | நியூசிலாந்து | V |
B1 |
03-11-2021 |
19:30 | இந்தியா | V |
ஆப்கானிஸ்தான் |
05-11-2021 |
15:30 | நியூசிலாந்து | V |
A2 |
05-11-2021 |
19:30 | இந்தியா | V |
B1 |
07-11-2021 |
15:30 | நியூசிலாந்து | V |
ஆப்கானிஸ்தான் |
07-11-2021 |
19:30 | பாகிஸ்தான் | V |
B1 |
08-11-2021 |
19:30 | இந்தியா | V |
A2 |
குழு 2 இல் வெற்றி பெறும் முதல் இரு அணிகள் முறையே G2A2, G2B2 என கொள்ளப்படும்.
அரை இறுதிப் போட்டிகள் பற்றிய விபரங்கள்
திகதி |
நேரம் |
அணிகள் |
||
10-11-2021 |
19:30 | G1A1 | V |
G2B2 |
11-11-2021 |
19:30 | G2A2 | V |
G1B1 |
அரை இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிகள் S1, S2 என கொள்ளப்படும்
திகதி |
நேரம் |
அணிகள் |
||
14-11-2021 |
19:30 | S1 | V |
S2 |
உலகக் கிண்ண இருபதுக்கு இருபது போட்டிகளில் 2 முறை மேற்கிந்திய தீவுகள் அணி கிண்ணத்தை தன்வசமாக்கிக்கொண்டுள்ளது.
மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி 2007 ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத்தை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
உலகமெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இவ்வுலக கிண்ண போட்டிகளை கண்டுகளிக்க ஆவலாக உள்ளனர்.
நாமும் அவ்வாறே ஆவலாக காத்திக்கொண்டிருக்கிறோம்.
அனைத்து அணிகளுக்கும் எமது வாழ்த்துக்கள்
இந்த கட்டுரையை அனைவருக்கும் பகிரவும்