Smart Tamil Trend

Trending Now

Google Search

Etharkkum Thunindhavan Trailer

எதற்கும் துணிந்தவன் ட்ரெய்லர் இதோ

Spread the love

நடிகர் சூர்யா அவர்களின் எதற்கும் துணிந்தவன் (Etharkkum Thunindhavan Trailer)  திரைப்படத்தின் ட்ரெய்லர் சற்று முன்னதாக வெளியாகியுள்ளது. இயக்குனர் பாண்டிராஜ் அவர்கள் இயக்கும் 10 வது படமான இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் (Sun Pictures) சார்பில் கலாநிதி மாறன் அவர்கள் தயாரித்துள்ளார்.

முதன்மை கதாபாத்திரத்தில் சூர்யா மற்றும் பிரியங்கா அருள் மோகன் ஆகியோர் நடித்துள்ளதோடு வில்லன் பாத்திரத்தில் வினய் நடித்திருக்கிறார்.

மேலும், ராஜ்கிரண், சத்தியராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, புகழ், M.S பாஸ்கர், இளவரசு உட்பட பலர் நடித்துள்ளார்கள்.

R. ரத்ணவேலு அவர்கள் இந்த திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அத்துடன், ரூபண் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இத்திரைப்படத்திற்கு D. இமான் அவர்கள் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

சற்று முன்னர் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ட்ரெய்லரில் சூர்யாவின் அனைத்து குணாதியசங்களையும் ஒன்றாக பார்க்க முடிகிறது. இது ஒரு குடும்ப திரைப்படம் என்பதில் எந்த சந்தேகவும் இல்லை.

சந்தோஷம், துக்கம், நகைச்சுவை, கோபம், வீரம் என அனைத்தையும் கொண்ட ஒரு திரைப்படமாக இந்த எதற்கும் துணிந்தவன் இருக்கும்.

சரண்யா பொன்வண்ணன் அவர்களின் நகைச்சுவை கலந்த அம்மா செண்டிமெண்ட் (Sentiment) ட்ரெய்லரில் மிகவும் அருமையாக உள்ளது.

மேலும், சூரி மற்றும் புகழ் ஆகியோரின் நகைச்சுவையும் நன்றாக இருக்கும் என கூறமுடியும்.

இந்த திரைப்படமானது பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எடுத்துக்காட்டும் ஒரு திரைப்படமாக அமையும் என்று உறுதியாக கூறமுடியும்.

மேலும், பெண்கள் சமூகத்தில் படும் கஷ்டங்களையும் மன உலைச்சலையும் பிரதிபலிக்கும் படமாக இந்த திரைப்படம் கண்டிப்பாக அமையும்.

சூர்யாவின் மாஸான நடிப்பு, வசனம் என அனைத்தும் மெய்சிலிர்க்கவைக்கிறது.

 

ட்ரெய்லர் வெளியாகி ஒன்றரை மணி நேரத்தில் 497K  வீவ்ஸ்களை (Views) பெற்றுள்ளது. அத்துடன் 118K லைக்ஸ்களையும் (Likes) பெற்றுள்ளது.

இத்திரைப்படம் மார்ச மாதம் 10 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது.
எதற்கும் துணிந்தவன் ட்ரெய்லர் (Etharkkum Thunindhavan Trailer) இனை கீழே பார்க்கலாம்.


Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *