நடிகர் சூர்யா அவர்களின் 40 வது திரைப்படம் தான் எதற்கும் துணிந்தவன் (Etharkkum Thunindhavan). இது ஒரு ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாகும்.
இயக்குனர் பாண்டிராஜ் அவர்கள் எழுதி இயக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் (Sun Pictures) தயாரிக்கிறது.
இந்த திரைப்படத்தில் பிரியங்கா அருள் மோகன், வினய், ராஜ்கிரண், சத்தியராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன், சிபி புவண சந்திரன், M.S பாஸ்கர் தேவதர்ஷினி உள்ளிட்ட மாரும் நடிகர் பட்டாளமே நடித்துள்ளது.
இத்திரைப்படத்திற்கு D. இமான் அவர்கள் இசை வழங்கியுள்ளார். ஏற்கனவே சன் தொலைக்காட்சியின் (Sun TV) உத்தியோகபூர்வ யூடியுப் சேனலில் வெளியான 3 பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
இப்படத்தில் R. ரத்ணவேலு அவர்கள் ஒளிப்பதிவு பணிகளை செய்திருக்கிறார். மேலும், ரூபண் படத்தொகுப்பு செய்துள்ளார்.
எதற்கும் துணிந்தவன் டீசர் (Etharkkum Thunindhavan Teaser) சற்று முன்பு வெளியாகியுள்ளது.
டீசரில் சூர்யா தோன்றும் காட்சிகள் மிகவும் மாஸாக உள்ளது. கிராமபுர காட்சிகளை சித்தரிக்கும் அண்ணன், தங்கை பாசத்தை மையமாக கொண்ட ஒரு படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
டீசரில் பெரும்பாலான காட்சிகள் சண்டைக்காட்சிகளாகவே உள்ளது. ஆகவே சூர்யா ரசிகர்களுக்கு பிடித்த மாஸான சூர்யாவை இப்படத்தில் காணலாம்.
வினய் இப்படத்தில் வில்லனாக தோன்றியுள்ளார். டீசரில் இடப்பெற்றுள்ள வசனங்கள் படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
டீசரின் இறுதியில் நடிகர் சூர்யா கூறும் “என் கூட இருக்கவங்க எப்பவும் பயப்பட கூடாதுல நம்மல யாரும் ஒன்னும் பண்ண முடியாது” என்று கூறும் வசனம் படத்தின் மாஸை எடுத்து காட்டுகிறது.
டீசர் வெளியாகி 1 மணித்தியாலத்தில் 842K க்கும் அதிகமான வீவ்ஸ்களையும் (Views) 190K லைக்களையும் (Likes) பெற்றுள்ளது.
இத்திரைப்படம் மார்ச் 10 ஆம் திகதி தியேட்டர்களில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
எதற்கும் துணிந்தவன் டீசரினை கீழே பார்க்கவும்.