வாரிசு திரைப்படம் | Varisu Movie
தளபதி விஜய் அவர்களின் 66 வது திரைப்படமாக உருவாகியுள்ளது வாரிசு. இது ஆக்ஷன் நிறைந்த ஒரு திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்குவதோடு, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ், PVP சினிமா ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளன. இத்திரைப்படத்தில் பல நடிகர்கள் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். வாசிசு திரைப்படம் (Varisu Movie) ஏறத்தாழ 200 கோடி இந்திய ரூபாய் மதிப்பில் உருவாயுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் சென்னை, ஹைதராபாத், விசாகப்பட்டிணம் போன்ற இடங்களில் நடந்துள்ளன. …