நடிகர் அஜித் குமார் இந்திய சினிமாவில் அனைவராலும் அறியப்பட்ட, உலகமெங்கும் கோடிக்கணக்கில் ரசிகர்களை கொண்ட மிக சிறந்த நடிகர் ஆவார்.
அஜிதின் படங்களை (Ajith movies in Tamil) பார்க்கும் போது,ஆரம்பத்தில் பல காதல் படங்களில் நடித்திருந்தாலும், பிறகு முக்கியமான பல வகையான கதைகளை தேர்ந்தெடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்.
கதைக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து அதன் கதாபாத்திரத்திற்கு முழுமையான நடிப்பை வெளிக்காட்டி அவரின் திறமையை ஒவ்வொரு படத்திலும் நிரூபித்துக்காட்டுகிறார்.
அவரின் திறமையான நடிப்பை அங்கிகரிக்கும் வகையில் அவர் பல விருதுகளையும் வென்று காட்டியுள்ளார்.
சினிமா வாழ்க்கையிலும் மட்டுமன்றி இவர் நிஜ வாழ்க்கையிலும் ஒரு மோட்டார் சைக்கில் மற்றும் கார் பந்தய வீரராக திகழ்கிறார்.
நடிகர் அஜித் குமார் என் வீடு என் கணவர் என்ற படத்தில் நடித்திருந்தாலும், ஒரு கதாநாயகனாக முதன் முதலில் அமராவதி திரைப்படத்தில் (Ajith first movie) அறிமுகமானார் . இவர் தமிழில் மட்டுமன்றி, ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் நடித்துள்ளார்.
இவர் தமிழில் விஜய், அரவிந்த் ஸ்வாமி, பிரசாந்த், கார்த்திக், பார்த்திபன், அப்பாஸ், ராகவா லாரன்ஸ், அர்ஜுன், ஆர்யா, அருண் விஜய் உட்பட பல முன்னணி நடிகருடனும் சேர்ந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிட வேண்டிய விடயமாகும்.
அதேபோல, அமிதாப் பச்சன், சாருக் கான், மம்முட்டி, விவேக் ஓப்ராய் போன்ற பிற மொழிகளில் உள்ள உச்ச நட்சத்திரங்களோடும் நடிகர் அஜித் குமார் பணியாற்றியுள்ளார்.
இனி நடிகர் அஜித் குமார் நடித்த திரைப்படங்கள் பற்றிய அட்டவணையைப் (Ajith movies list in Tamil) பார்க்கலாம்.
அஜித் படங்கள்: 1990 – Ajith movies list in Tamil

1. என் வீடு என் கணவர்
நடிகர்கள் | சுரேஷ், நதியா, அஜித் குமார், மனோரமா, செந்தில் |
இயக்குனர் | செண்பக ராமன் |
தயாரிப்பாளர் | M. S. கோபிநாத் |
இசையமைப்பாளர் | B. சுரேந்தர் |
வெளியிடப்பட்ட திகதி | 13 ஏப்ரல் 1990 |
அழைக்கப்பட்ட பெயர் | – |
அஜித் படங்கள்: 1991 – 2000 – Ajith movies list in Tamil
2. அமராவதி
நடிகர்கள் | அஜித் குமார், சங்கவி, சார்லி, நாசர், கவிதா |
இயக்குனர் | செல்வா |
தயாரிப்பாளர் | சோழ பொன்னுரங்கம் |
இசையமைப்பாளர் | பால பாரதி |
வெளியிடப்பட்ட திகதி | 04 ஜூன் 1993 |
அழைக்கப்பட்ட பெயர் | அர்ஜூன் |
3. பிரேம புஸ்தகம்
நடிகர்கள் | அஜித் குமார், காஞ்சன், தங்கனா, ஸ்வாதி, மிஸ்ரோ |
இயக்குனர் | கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ், கொல்லப்புடி மாருதி ராவோ |
தயாரிப்பாளர் | அட்லுரி பூர்ணசந்திர ராவோ |
இசையமைப்பாளர் | தேவேந்திரன் |
வெளியிடப்பட்ட திகதி | 16 ஜூலை 1993 |
அழைக்கப்பட்ட பெயர் | ஸ்ரீகர் |
4. பாச மலர்கள்
நடிகர்கள் | அரவிந்த் ஸ்வாமி, ரேவதி, அஜித் குமார், ஸ்ரீ வித்யா |
இயக்குனர் | சுரேஷ் சந்திர மேனன் |
தயாரிப்பாளர் | சுரேஷ் சந்திர மேனன் |
இசையமைப்பாளர் | V. S. நரசிம்ஹன் |
வெளியிடப்பட்ட திகதி | 04 பெப்ரவரி 1994 |
அழைக்கப்பட்ட பெயர் | குமார் |
5. பவித்ரா
நடிகர்கள் | ராதிகா, நாசர், அஜித் குமார், வடிவேலு, கோவை சரளா |
இயக்குனர் | K. சுபாஷ் |
தயாரிப்பாளர் | K. சுபாஷ் |
இசையமைப்பாளர் | A. R. ரகுமான் |
வெளியிடப்பட்ட திகதி | 02 நவம்பர் 1994 |
அழைக்கப்பட்ட பெயர் | அசோக் |
6. ராஜாவின் பார்வையிலே
நடிகர்கள் | அஜித் குமார், விஜய், இந்திரஜா, வடிவேலு, ஜனகராஜ் |
இயக்குனர் | ஜானகி சௌந்தர் |
தயாரிப்பாளர் | S. சௌந்தர பாண்டியன் |
இசையமைப்பாளர் | இளையராஜா |
வெளியிடப்பட்ட திகதி | 05 ஆகஸ்ட் 1995 |
அழைக்கப்பட்ட பெயர் | சந்துரு |
7. ஆசை
நடிகர்கள் | அஜித் குமார், சுவலக்ஷ்மி, வடிவேலு, பிரகாஷ் ராஜ் |
இயக்குனர் | வசந்த் |
தயாரிப்பாளர் | மணி ரத்னம், S. ஸ்ரீராம் |
இசையமைப்பாளர் | தேவா |
வெளியிடப்பட்ட திகதி | 09 செப்டம்பர் 1995 |
அழைக்கப்பட்ட பெயர் | ஜீவானந்தம் (ஜீவா) |
8. வான்மதி
நடிகர்கள் | அஜித் குமார், ஸ்வாதி, தாமு, வடிவுக்கரசி, பாண்டு |
இயக்குனர் | அகத்தியன் |
தயாரிப்பாளர் | சிவசக்தி பாண்டியன் |
இசையமைப்பாளர் | தேவா |
வெளியிடப்பட்ட திகதி | 12 ஜனவரி 1996 |
அழைக்கப்பட்ட பெயர் | கிரிஷ்ணா |
9. கல்லூரி வாசல்
நடிகர்கள் | பிரசாந்த், அஜித் குமார், பூஜா பட், தேவயாணி |
இயக்குனர் | பவித்ரன் |
தயாரிப்பாளர் | N. A. சுதாகரன், K. P. உன்னி கிருஷ்ணன் |
இசையமைப்பாளர் | தேவா |
வெளியிடப்பட்ட திகதி | 18 பெப்ரவரி 1996 |
அழைக்கப்பட்ட பெயர் | வசந்த் |
10. மைனர் மாப்பிளை
நடிகர்கள் | அஜித் குமார், சுபாஸ்ரீ, ஸ்ரீ வித்யா, விவேக், வடிவேலு |
இயக்குனர் | V. C. குஹநாதன் |
தயாரிப்பாளர் | K. ராகவா |
இசையமைப்பாளர் | இசைவாணன் |
வெளியிடப்பட்ட திகதி | 28 ஜூன் 1996 |
அழைக்கப்பட்ட பெயர் | ராமு |