Smart Tamil Trend

Trending Now

Google Search

Actor Vikram

சீயான் விக்ரமின் வெளிவரவிருக்கும் திரைப்படங்கள்

Spread the love

நாம் அனைவரும் நன்கு அறிவோம் நடிகர் விக்ரம் (Actor Vikram) ஒரு நடிப்பு கடல் என்று. இதுவரை வந்த அவரது படங்களே அதற்கு சிறந்த ஆதாரங்களாகும். இவரின் நடிப்பில் இனி வரவிருக்கும் திரைப்படங்களும் அவ்வாறே.

இனி, அவற்றை பற்றி ஒவ்வொன்றாக பார்ப்போம்.

  1. கோப்ரா (Cobra)

இது ஒரு ஆக்ஷன், த்ரில்லர் படமாகும். இப்படத்தை இயக்குநர் R. அஜய் ஞானமுத்து அவர்கள் இயக்கியுள்ளார்.

இவர் டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோப்ரா திரைப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் (Seven Screen Studios) சார்பில் S.S லலித் குமார் தயாரிக்கிறார்.

இப்படத்தின் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இது இவரின் முதலாவது தமிழ் திரைப்படமாகும்.

மேலும், இப்படத்தின் இன்னொரு புதுமுக நடிகராக அறிமுகமாகிறார் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் (Irfan Pathan).

இவர்களுடன் இணைந்து மியா, K.S ரவிக் குமார், பத்ம பிரியா, ரோபோ ஷங்கர், ரொஷான் மேத்யூ, கனிகா சுப்ரமணியம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

இப்படத்திற்கு இசைப் புயல் A.R ரகுமான் அவர்கள் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தை ஹரிஷ் கண்ணன் ஓளிப்பதிவு செய்வதோடு, புவண் ஸ்ரீநிவாசன் படத்தொகுப்பு செய்கிறார்.

  1. துருவ நட்சத்திரம்

நடிகர் விக்ரமுடன் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் முதன் முறையாக இணைந்து பணியாற்றியுள்ளார்.

இது ஒரு வேவு பார்க்கும் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது.

இப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன், வெங்கட் சோமசுந்தரம், ரேஸ்மா கடாலா, ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

அத்துடன், ரிடு வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், R. பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், அர்ஜுன் தாஸ் உட்பட பலர் நடித்துள்ளார்கள்.

இப்படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் அவர்கள் இசையமைத்திருக்கிறார்.

படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி அவர்கள் மேற்கொள்ளும் அதேவேளை, மனோஜ் பரமஹம்சா, ஜொமோன் T. ஜோன், சந்தன கிருஷ்ணன், ரவிச்சந்திரன், S.R கதிர் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.

  1. பொன்னியின் செல்வன்

இது ஒரு வரலாற்றுக் காவிய ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வருகிறது. இப்படத்தை மாபெரும் இயக்குனரான மணி ரத்னம் அவர்கள் இயக்குகிறார்.

மணி ரத்னம் அவர்களின் மெட்ராஸ் டாக்கீஸ் (Madras Talkies) நிறுவனமும் அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களின் லைகா புரொடக்ஷனும் (Lyca Productions) இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.

இப்படத்தில் ஒரு மாபெரும் நடிகர் பட்டாளமே நடிக்கிறது என்று சொல்லலாம்.

விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சான், த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத்குமார், ஜெயராம், பிரபு, பார்த்திபன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சோபிதா துலிபலா, பிரகாஷ் ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின் ககுமணு, நிழல்கள் ரவி, சாரா அர்ஜுன், நாசர், ரியாஸ் கான் உட்பட பலர் நடிக்கிறார்கள்.

வலமைபோலவே, இப்படத்திற்கும் இசைப்புயலே இசையமைக்கிறார்.

A. ஸ்ரீகர் பிரசாத் அவர்கள் இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

இப்படத்தை ரவி வர்மண் அவர்கள் ஒளிப்பதிவு செய்கிறார்.

500 கோடி இந்திய ரூபாய் மதிப்பில் இப்படம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விக்ரமின் (Actor Vikram) இந்த அனைத்து திரைப்படங்களுமே சிறந்த திரைப்படங்களாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இவற்றை அனைவரும் மிக ஆர்வமாக எதிர்பாத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இவ்வனைத்து திரைப்படங்களும் மாபெரும் வெற்றியை அடைய வேண்டும் என படக்குழுவினர்களுக்கு எமது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.


Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *