நடிகர் கார்த்தி (Actor Karthi) சில முக்கியமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவரின் வெளியாகவுள்ள திரைப்படங்களும் வெற்றியடையும் என்பதில் சந்தேகம் இல்லை.
-
சர்தார்
இது ஒரு வெவு பார்க்கும் த்ரில்லர் படமாக உருவாகிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை P.S மித்ரன் இயக்குகிறார்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் (Prince Pictures) சார்பில் S. லக்ஷ்மண் குமார் அவர்கள் இப்படத்தை தயாரிக்கிறார்.
இப்படத்தின் முன்னணி பாத்திரங்களில் கார்த்தியும் ராஷி கண்ணாவும் ராஜிஷா விஜயனும் நடிக்கிறார்கள்.
மேலும், லைலா, முனிஷ்காந்த், சன்கி பாண்டே (Chunky Pandey), முரளி ஷர்மா, இளவரசு ஆகியோர் துணைக்கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
ஆரம்பத்தில் சிம்ரன் அவர்கள் இப்படத்தில் நடிப்பதாக அறிவித்திருந்தார்கள். எனினும், சிலப் பல காரணங்களினால் பிறகு அவருக்கு பதிலாக நடிகை லைலா நடிக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது.
நடிகை லைலா 16 வருடங்களுக்கு பின் மீண்டும் சினிமாவில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சன்கி பாண்டே அவர்கள் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவர் ஒரு ஹிந்தி நடிகர் ஆவார். அத்துடன், இவர் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
G.V பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசை வழங்குகிறார்.
இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை ஜோர்ஜ் C. வில்லியம்ஸ் (George C. Williams) செய்கிறார்.
ரூபண் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.
-
விருமன்
நடிகர் கார்த்தி கொம்பன் பட இயக்குநரான முத்தையா அவர்களுடன் மீண்டும் இப்படத்தின் மூலம் இணைகிறார்.
கார்த்திக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் இப்படத்தில் அறிமுகமாகிறார். இவர் பிரபல இயக்குநர் ஷங்கர் அவர்களின் இளைய மகளாகும்.
இப்படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், சூரி, மைனை நந்தினி, மனோஜ் பாரதிராஜா உட்பட பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தை 2D எண்டர்டெயிண்ட்மெண்ட் (2D Entertainment) சார்பில் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.
இப்படத்திற்கு யுவண் ஷஙகர் ராஜா இசையமைக்கிறார்.
அத்துடன், செல்வகுமார் S.K என்பவர் இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். வெங்கட் ராஜென் என்பவர் படத்தொகுப்பு செய்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது, இறுதிகட்ட பணிகள் நடந்துக்கொண்டிருக்கின்றன.
-
பொன்னியின் செல்வன்
இது பலராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் என்று சொல்லலாம். இப்படத்தை மாபெரும் இயக்குநர் மணி ரத்னம் அவர்கள் இயக்குகிறார்.
இது ஒரு காவிய, வரலாற்று, புனைகதை படமாக உருவாகியுள்ளது.
இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் (Madras Talkies) மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் (Lyca Productions) ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறன்றன.
இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சான், கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி, ஜெயராம், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, பிரபு, சரத்குமார், சோபிதா துலிபலா, R. பார்த்திபன், அஸ்வின் ககுமனு, பிரகாஷ் ராஜ், ரஹ்மான், நாசர், லால், ரியாஸ் கான், நிழல்கள் ரவி, கிஷோர், விஜய் ஜேசுதாஸ் உள்ளிட்ட பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளது.
இப்படத்திற்கு இசைப் புயல் A.R ரகுமான் அவர்கள் இசையமைத்திருக்கிறார்.
ரவி வர்மண் அவர்கள் இப்படத்தை ஒளிப்பதிவு செய்கிறார். அத்துடன் A. ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்ய ஒப்பந்தமாகியுள்ளார்.
இப்படம் 500 கோடி இந்திய ரூபாய் மதிப்பில் உருவாகிறது.
இப்படம் 2 பாகங்களாக வெளிவரவுள்ளதுடன் முதல் பாகம் இவ்வருடம் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்துள்ளன.
நடிகர் கார்த்தியின் (Actor Karthi) அனைத்து திரைப்படங்களும் வெற்றியடைய வேண்டும் என வாழ்த்துகிறோம்.