Smart Tamil Trend

Trending Now

Google Search

Ways to Speed up Android Smartphone » ஸ்லோவாக இருக்கும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை வேகமாக இயங்கச்செய்வதற்கான வழிகள்

ஸ்லோவாக இருக்கும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை வேகமாக இயங்கச்செய்வதற்கான வழிகள்

Spread the love

ஆண்ட்ராய்டு இயக்க முறையை கொண்ட ஸ்மார்ட்போன்கள் உலகில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்கு காரணம் ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் அனைத்து விதமான ஆப்களும் (Apps) இயங்குவதோடு பயன்படுத்த மிகவும் இலகுவாக இருப்பது தான். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் புதிதாக வாங்கும் போது இருக்கும் வேகம் நாட்கள் செல்ல செல்ல இருப்பதில்லை. மெதுவாக இயங்க ஆரம்பித்துவிடுகின்றன. அவற்றை எப்படி சரி செய்வது என்று பார்ப்போம்.

இயக்க முறைமையை (Operating System) புதுப்பித்தல் (Update)

ஸ்மார்ட்போன்களின் ஆண்ட்ராய்டு இயக்க முறைமை அடிக்கடி புதுப்பிக்கபடும். நீங்கள் உங்களுடைய போனில் புதிய பதிப்பை (Version) நிறுவியுள்ளீர்களா (Install) என அவதானித்துக்கொள்ளுங்கள். புதிய பதிப்பை நிறுவுவதால் போனில் வேகம் அதிகரிக்கும்.

ஹோம் ஸ்க்ரீனில் (Home Screen) உள்ளவற்றை நீக்குதல்

நீங்கள் ஹோம் ஸ்க்ரீனை அழகாக வைத்துக்கொள்ள விட்ஜெட்கள் (Widgets) செயற்படுத்தியிருப்பீர்கள். எந்நேரமும் அவற்றில் செய்திகள், வானிலை அறிக்கை, சமூக வலைத்தள அறிவிப்புகள் (Notifications) மற்றும் மேலும் பல விடயங்களை காட்டிக்கொண்டிருக்கும். இடைவிடாமல் இயங்கிக்கொண்டிருப்பதால் போன் மெதுவாக தொழிற்பட வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமல்லாமல் இலகுவாக பயன்படுத்துவதற்காக சில ஆப்கள், ஸோர்ட்கட் (Shortcut) ஆகியவற்றை ஹோம் ஸ்க்ரீனில் வைத்திருப்பீர்கள். அவை எல்லாவற்றையும் நீக்க வேண்டும். அதன்பின் உங்களுடைய ஸ்மார்ட்போன் வேகமாக தொழிற்படுவதை உணர்வீர்கள்.

அனிமேஷன்களை (Animations) குறைத்தல் அல்லது நீக்குதல்

உங்களது போனில் அளவுக்கு அதிகமாக அனிமேஷன் செயற்படுத்தியுள்ளீர்கள் என்றால் அவற்றை குறைவாக பயன்படுத்துங்கள்; அல்லது முற்றிலுமாக நீக்குங்கள். ஏனெனில் அவைகளும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பதால் நீங்கள் ஒரு ஆப் ஐ ஓவன் (Open) செய்யும் போது அது சற்று நேரம் கழித்து தான் செயற்பட ஆரம்பிக்கும். ஆகவே அனிமேஷன்கள் நிறுத்தப்படும் பொழுது போன் வேகமாக தொழிற்படும். அனிமேஷன்களை ஆஃப் (Off) செய்ய செட்டிங்ஸில் (Settings) டிவெலொப்பர் ஒப்ஸன்ஸ் (Developer Options) எனும் தெரிவிற்கு (Option) சென்று அங்குள்ள அன்மேஷன் சம்பந்தமான தெரிவுகளில் குறைக்கவோ அல்லது நிறுத்தவோமுடியும். ஆரம்பத்தில் டிவெலொப்பர் ஒப்ஸன்ஸை பார்க்க முடியாது. அதற்கு செட்டிங்ஸில் எபவுட் போன் (About Phone) எனும் தெரிவிலுள்ள பில்ட் நம்பர் (Build Number) என்ற தெரிவை தொடர்ந்து ஏழு தடவை க்ளிக் (Click) செய்வதன் மூலம் டிவெலொப்பர் ஒப்ஸன்ஸை பெறலாம்.

கேச் கோப்புகளை (Cache Files) அழித்தல்

நீங்கள் வலைத்தளங்களுக்கு (Websites) பிரவேசிக்கும் பொழுது அல்லது ஆப்களை பயன்படுத்தும் பொழுது அவற்றால் தன்னியக்கமாக சில கோப்புகள் உங்களது ஸ்மார்ட்போனில் உட்புற சேமிப்பகத்தில் (Internal Storage) சேமிக்கப்படும். அவைதான் கேச் கோப்புகள். நீங்கள் வலைத்தளங்கள் அல்லது ஆப்களை பயன்படுத்தும் போது அவற்றில் உள்ள புகைப்படங்கள், எழுத்து பிரதிகள் (Scripts), கிராப்பிக்ஸ் உள்ளடக்கங்கள் (Graphics Contents) மற்றும் ஊடக கோப்புகள் (Media Files) போன்றவை களஞ்சியப்படுத்தப்படும். ஏனென்றால் நீங்கள் ஏற்கனவே பார்வையிட்ட வலைப்பக்கத்திற்கு அல்லது ஆப்பிற்கு மீண்டும் பிரவேசிக்கும் போது விரைவாக அவை லோட் (Load) செய்வதற்காக இக்கோப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் அவை மீண்டும் மீண்டும் பதிவிரக்கம் (Download) செய்யாமல் இருப்பதற்காகவும் சேமிக்கப்படுகின்றன. அக்கோப்புகளை அழிப்பதால் போன் வெகமாக இயங்கும். கேச் கோப்புகளை அழிப்பதற்கு கீழ்வரும் வழியை பின்பற்றுங்கள்

செட்டிங்ஸ் (Settings) → ஸ்டோரேஜ் (Storage) → கேச் டேடா (Cache Data)

தானியங்கு ஒத்திசைவை (Auto Sync) ஆஃப் (Off) செய்தல்

நீங்கள் பதிவிரக்கம் செய்யும் ஆப்கள் நிறுவப்படும் போது பெரும்பாலும் தானியங்கு ஒத்திசைவு செயற்படுத்தப்பட்டிருக்கும். ஆப்களை பயன்படுத்துகையில் அவற்றில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது பதிவிரக்கங்கள் ஒரு கால இடைவேளையில் தன்னியக்கமாக சேமிக்கப்படும். எனவே ஆப்களில் தானியங்கு ஒத்திசைவு செயற்படுத்தப்பட்டிருப்பின் அத்தெரிவை ஆஃப் செய்துவிட்டு முடிந்தவரை உங்களுக்கு முடிந்த நேரங்களில் ஒத்திசைவு செய்வது சிறந்தது.

செட்டிங்ஸ் (Settings) → அக்கவுண்ட்ஸ் (Accounts)

மேலுள்ளவாறு பின்பற்ற ஒத்திசைவு செய்யப்பட வேண்டிய ஆப்களை பார்க்கலாம்.

பின்னணியில் இயங்கும் சேவைகளை (Background Services) குறைத்தல்

உங்களது ஸ்மார்ட்போனில் பின்னணியில் நிறைய ஆப்கள் இயங்கும். அவை வெளிப்படையாக தெரியாது. அவற்றை செட்டிங்ஸ் (Settings) இல் டிவெலொப்பர் ஒப்ஸன்ஸ் (Developer Options) இல் உள்ள பெக்கிரவுண்ட் செக் (Background Check) எனும் தெரிவில் பார்க்கலாம். உங்களுக்கு பின்னணியில் இயங்க தேவையில்லாத ஆப்களை செயற்படாமல் ஆஃப் செய்யமுடியும். அவ்வாறு செய்வதால் மின்கலத்தின் பாவணையும் அதிகரிக்கும். அத்துடன் ரெம் (RAM) இன் அளவு அதிகரிப்பதால் போன் வேகமாக இயங்கும்.

தேவையில்லாதவற்றை அழித்தல்

உங்களுடைய போனில் நிறைய ஆப்கள் உங்களால் நிறுவப்பட்டிருக்கும். நிறுவப்பட்ட ஆப்கள் மேலும் சில மென்பொருள்களை தானாகவே பதிவிரக்கம் செய்து நிறுவ வாய்ப்பு உள்ளது. நீங்கள் பயன்படுத்தாத அல்லது தேவையற்ற ஆப்கள் காணப்படின் அவற்றை நீக்கிவிட வேண்டும். அதுமட்டுமன்றி புகைப்படங்கள், கானொளிகள் (Videos), ஆவணங்கள் (Documents), ஆடியோக்கள் (Audios) மற்றும் மேலும் பல கோப்புகளை சேமித்து வைத்திருப்பீர்கள். அவற்றில் தேவையில்லாதவற்றை அழித்துவிட சேமிப்பகத்தில் இடம் அதிகரிக்கும். கட்டாயமாக தேவைப்படுகிற புகைப்படங்கள், கானொளிகள் மற்றும் கோப்புகள் இருப்பின் புறம்பான சேமிப்பகமான (External Storage) சிப் (Chip) ஐ பொருத்தி அவற்றில் சேமித்து வைக்கலாம். உள்ளக சேமிப்பகத்தில் இடவசதி அதிகரிக்கையில் போன் வேகமாக தொழிற்படும்.

ரெம் இல் இடவசதியை அதிகரித்தல்

நீங்கள் ஒரே நேரத்தில் அதிகளவு ஆப்களை பயன்படுத்தும் சந்தர்ப்பங்கள் உண்டு. பயன்படுத்திவிட்டு சிலநேரங்களில் அவற்றை எக்சிட் (Exit) செய்ய மறந்துவிடுவீர்கள். அச்சமயங்களில் ஓவன் செய்யப்பட்ட அனைத்து ஆப்களும் இயங்கிக்கொண்டு தான் இருக்கும். ரெம் அதிகமாக பயன்படுத்தப்பட்டுக்கொண்டிடுக்கும். ஆகவே போன் ஸ்லோ (Slow) ஆக செயற்படும். ஓபன் செய்யப்பட்ட ஆப்களை ஹோம் ஸ்க்ரீனில் உள்ள ரீசண்ட் ஆப்ஸ் (Recent Apps) தெரிவில் பார்க்கலாம். அவை அனைத்தையும் க்லோஸ் (Close) செய்வதால் ரெம் இன் அளவு அதிகரிக்க போனின் வேகமும் அதிகரிக்கும்.

எளிமையான தீம் (Theme) பயன்படுத்தல்

ஸ்மார்ட்போன்களின் ஸ்க்ரீன் (Screen) அழகாக தெரிவதற்காக விதவிதமான தீம்களை பயன்படுத்துவது வழக்கம். ஒவ்வொரு தீமும் ஒவ்வொரு கொள்ளளவை கொண்டிருக்கும்; வேறுபட்ட சிறப்பம்சங்களை கொண்டிருக்கும். அந்நிலையில் அவற்றை நிறுவும் போது போன் தொழிற்படவேண்டிய வீதம் அதிகரிக்கிறது. சிபியூ (Central Processing Unit (CPU)) மற்றும் ஜிபியூ (Graphics Processing Unit (GPU)) ஆகியவற்றின் செயற்பாடு அதிகரிப்பதோடு ரெம் பயன்படுத்தப்படும் அளவும் கூடுகிறது. அதன்போது போன் மந்தமாக செயற்படும். எனவே எளிமையான தீம் பயன்படுத்துவது மிக சிறந்தது.

ரீசெட் (Reset) செய்தல்

மேற்குறிப்பிட்ட முறைகள் செய்தும் உங்களுடைய போன் வேகமாக இயங்கவில்லை என்றால் போனை ரீசெட் செய்வது நல்லது. ரீசெட் செய்கையில் அனைத்து கோப்புகள் மற்றும் ஆப்கள் அழியும் வகையில் ரீசெட் பண்ண வேண்டும். அதன் பிறகு பார்த்தால் நீங்கள் புதிதாக விலைக்கு வாங்கிய ஸ்மார்ட்போனை போல உங்களுடைய போன் காட்சியளிக்கும்.


Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *