Smart Tamil Trend

Trending Now

Google Search

2.0 » ஷங்கரின் 2.0 இல் உள்ள சிறப்பம்சங்களும் அதன் உருவாக்கமும்

ஷங்கரின் 2.0 இல் உள்ள சிறப்பம்சங்களும் அதன் உருவாக்கமும்

Spread the love

இந்திய திரையுலகில் எல்லோராலும் மிகவும் எதிர்பார்க்கப்படுகின்ற திரைப்படம் தான் இயக்குநர் ஷங்கரின் 2.0. இது முற்றிலும் அறிவியல் சார்ந்த திரைப்படமாகும். 2010 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் மற்றும் டேனி டென்சோன்ங்பா (Danny Denzongpa) ஆகியோரின் நடிப்பில் உருவான எந்திரன் என்ற திரைப்படத்தின் 2 ஆம் பாகம் தான் இந்த 2.0. எந்திரனின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ரஜினிகாந்த், ஷங்கர், ஏ.ஆர் ரகுமான் கூட்டணியில் உருவாகிக்கொண்டிருக்கிறது.

நடிகர்கள்

  • ரஜின்காந்த் (Rajinikanth)
  • அக்ஷய்குமார் (Akshay Kumar)
  • எமி ஜெக்சன் (Amy Jackson)
  • சுதன்ஷு பாண்டி (Sudhanshu Pandey)
  • அடில் ஹுசைன் (Adil Hussain)
  • கலாபவண் ஷாஜோன் (Kalabhavan Shajohn)
  • ரியாஸ் கான் (Riyaz Khan)

2.0 இந்திய சினிமாவில் மிகவும் விலை உயர்ந்த படமாக உருவாகியுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ஏறத்தாழ 543 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ளது. இதுவரை இந்திய சினிமாவில் அதிக செலவில் எடுக்கப்பட்ட படம் இதுதான். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் படபிடிப்புகள் நடந்துள்ளன. மேலும் 13 மொழிகளில் டப் (Dub) செய்யப்பட்டு வெளியிடப்படவுள்ளது.

ஆரம்ப பணிகள்

எந்திரனின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளர்கள் அதன் 2 ஆம் பாகத்தின் உருவாக்கம் பற்றி ஆர்வம் காட்டினார்கள். 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எந்திரன் திரைப்படத்தின் 2 ஆம் பாகத்தின் முன் ஏற்பாடுகள் அதே தொழிநுட்ப குழுவுடன் நடந்துகொண்டிருக்கின்றன என்று படக்குழுவினர் கருத்து வெளியிட்டார்கள். அச்சமயத்தில் இயக்குநர் ஷங்கர், நண்பன் மற்றும் ஐ திரைப்பட பணிகளில் ஈடுபட்டிருந்தார். ஐ திரைப்படத்தின் தயாரிப்பு பணிகள் முடிவடைந்ததற்கு பிறகு ஷங்கர் அவரிடம் இருந்த கதைகளில் எந்திரனின் 2 ஆம் பாக கதையை தேர்ந்தெடுத்தார்.

லைகா (Lyca) தயாரிப்பு நிறுவனம் திரைப்படத்தை தயாரிக்க முடிவானதுடன் 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பணிகள் ஆரம்பிப்பதற்கு அறிக்கையிடப்பட்டது. இயக்குநர் ஷங்கர், ரஜினிகாந்த், இசையமைப்பாளர் ஏ.அர் ரகுமான் மற்றும் படத்தொகுப்பாளர் (Editor) அந்தோனி (Anthony) ஆகியோருடன் ஜெயமோகன் வசன எழுத்தாளராக இணைத்துக்கொள்ளப்பட்டார். அதன்பின் கலை இயக்குநராக (Art Director) டீ.முத்துராஜ் அவர்களும் காட்சி திறன் மேற்பார்வையாளராக (Visual Effects Supervisor) வீ.ஸ்ரீனிவாஸ் மோகன் அவர்களும் இணைந்துகொண்டார்கள். ஒளிப்பதிவாளராக நீராவ் ஷா (Nirav Shah) இணைந்துகொண்டார்.

பிறகு படக்குழுவினர் 3D படப்பிடிப்பு முறைகளை ஆய்வுசெய்வதற்காக அமெரிக்காவிலுள்ள சிறந்த படப்பிடிப்பு அரங்கங்களை (Studio) பார்வையிட சென்றார்கள். எந்திரன் படத்திற்கு வசனங்களை எழுதிய மதன் கார்கியின் உதவியுடன் 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 2.0 இற்கான வசனங்களை எழுதி முடித்தார் ஜெயமோகன். ஒலி அமைப்பு (Sound Design) வேலைகளை ரெசுல் பூகுட்டி (Resul Pookutty) என்பவர் மேற்கொள்கிறார். அசைவூட்டம் (Animatronics) மற்றும் காட்சி திறன்கள் (Visual Effects) பணிகளை லெகசி எபெக்ட்ஸ் எனும் ஸ்டூடியோ (Legacy Effects) செய்கிறது. லெகசி எபெக்ட்ஸ் ஸ்டூடியோவானது ஹாலிவுட்டில் (Hollywood) சிறந்த படங்களான அவதார் (Avatar), அயன்மேன் 2 (Iron Man 2), அயன்மேன் 3 (Iron Man 3), அவெஞ்சர்ஸ் (Avengers) மற்றும் மேலும் பல திரைப்படங்களுக்கு காட்சி திறன்கள் செய்த ஸ்டூடியோ ஆகும். விஷேட ஆடை வடிவமைப்பாளராக வோக்ட் (Vogt) என்பவரும் சண்டைக்காட்சி இயக்குநராக கென்னி பேட்ஸ் (Kenny Bates) என்பவரும் காட்சி திறன்கள் வல்லுநர்களாக ஜோன் ஹக்ஸ் (John Hughes) மற்றும் வால்ட் ஜோன்ஸ் (Walt Jones) என்பவர்களும் பணிபுரிகிறார்கள்.

இயக்குநர் ஷங்கர் நடிகர்கள் கமல்ஹாசன், அமீர்கான் மற்றும் விக்ரம் ஆகியோரிடம் அடுத்த முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது பற்றி கலந்துரையாடினார். இருந்தபொழுதிலும் கூட அவர்கள் மூவராலும் நடிக்க முடியாமல் போனது. பிறகு படக்குழு ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்ச்வார்சேனேக்கரிடம் (Arnold Schwarzenegger) கலந்துரையாடியது. அவர் அதிக ஊதியத்தை (100 கோடி) எதிர்பார்த்தமையாலும் இதற்கு தயாரிப்பாளர்கள் முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்தமையாலும் அர்னால்டை இப்படத்திற்கு ஒப்பந்தம் செய்வது கைவிடப்பட்டது.

பிறகு பிரித்தானிய நடிகை எமி ஜெக்சன் இப்படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கையெழுத்திட்டார். நடிகர் ஹிரித்திக் ரோஷன், நடிகர் நீல் நிதின் முகேஷ் உட்பட நடிகர்களிடம் நடத்திய மேலதிக பேச்சுவார்த்தைக்கு பிறகு நடிகர் அக்ஷய் குமாரை அர்னால்டை தெரிவு செய்த கதாபாத்திரத்திற்காக ஒப்பந்தம் செய்தார்கள். எந்திரன் திரைப்படத்தில் பேராசிரியர் போரா (Bohra) கதாபாத்திரத்தின் மகனாகவும் விஞ்ஞானியாகவும் நடிப்பதற்கு சுதன்ஷு பாண்டி என்பவர் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

படப்பிடிப்பு

படத்திற்கு 2.0 என பெயர் வைக்கப்பட்டு 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி சென்னை ஈ.வி.பி வோர்ல்ட் (EVP World) எனும் இடத்தில் காட்சியமைப்புகள் அமைக்கப்பட்டு முதல்கட்ட படப்பிடிப்புகள் நடந்தன. ரஜினிகாந்த் மற்றும் எமி ஜெக்சன் ஆகியோரை வைத்து எடுக்கப்பட்ட முதல்கட்ட படப்பிடிப்புகள் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை தொடர்ந்தது. அதன்பின் ரஜினிகாந்த இடம்பெறும் இரண்டாம்கட்ட படப்பிடிப்புகள் சென்னை மோகன் ஸ்டூடியோவில் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாத நடுப்பகுதியில் நடந்தன. அடுத்து பொலிவியா நாட்டிலுள்ள சலார் டி உயுனி (Salar de Uyuni) எனும் உப்புத்தரையில் ஒரு பாடலுக்கான படப்பிடிப்புகள் நடக்க இருந்தபொழுதிலும் அச்சமயத்தில் அங்கு ஏற்பட்டிருந்த மோசமான காலநிலை காரணமாக அம்முயற்சி கைவிடப்பட்டது.

பிறகு அக்ஷய் குமார் இடம்பெறும் படப்பிடிப்புகள் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் சென்னை ஈ.வி.பி பிலிம் சிடி ஸ்டூடியோவில் (EVP Film City Studio) ஆரம்பிக்கப்பட்டன. அதன்போது ஒரு தொகை கைத்தொலைபேசிகள், ரொபோ சார்ந்த கருவிகள் மற்றும் இராணுவ தாங்கிகள் (Millitary Tanks) போன்றவற்றை வைத்து காட்சிகள் எடுக்கப்பட்டன. பின்னர் படக்குழுவினர் டெல்லிக்கு சென்று சென்னையில் எடுத்த படப்பிடிப்புகளின் தொடர்ச்சியை மேற்கொண்டார்கள். அதன்பின் இந்தியன் சூப்பர் லீக் (Indian Super League) போட்டியை சித்தரிக்கும் வகையில் ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் நூற்றுக்கு மேற்பட்ட இளைய கலைஞர்களை வைத்து காட்சிகள் எடுக்கப்பட்டன. பின் ரோபோ கருவிகள் சார்ந்த அதிரடி காட்சிகளைக்கொண்ட படப்பிடிப்புகள் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத பகுதியில் நிகழ்ந்தன. அதே ஆண்டு மே மாதத்தில் மீண்டும் ஈ.வி.பி பிலிம் சிடி ஸ்டூடியோவிலும் அதேபோல் த போரும் விஜயா சாப்பிங் மால் (The Forum Vijaya Shopping Mall) என்கிற கட்டிட கடைத்தொகுதியிலும் படப்பிடிப்புகள் நடந்தன. ஜூன் மாதமளவில் படத்தின் முடிவு காட்சிகள் மற்றும் முக்கிய படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்தன. ரஜினிகாந்த் உடல் நலக்குறைவால் இருந்தமையால் படத்தின் மற்ற பணிகள் நடந்தன. செப்டெம்பர் மாதத்தின் ஆரம்ப பகுதியில் ஆடம்பர கார்கள் சேதமடைகிறவாறான அதிரடி காட்சிகள் எடுக்கப்பட்டன. ரஜினிகாந்த குணமடைந்த பின்னர் எஞ்சிய படப்பிடிப்புகள் அனைத்தும் எடுக்கப்பட்டன. ஒக்டோம்பர் மாதத்தின் முற்பகுதியில் இயக்குநர் ஷங்கர் படத்தின் மூன்றில் இரண்டு பங்கு முடிவடைந்துவிட்டன என்று கருத்து வெளியிட்டார்.

இசை

இப்படத்தின் இசையமைப்பாளராக பணிபுரிகிறார் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான். பாடல்கள் அனைத்தும் சென்னையில் உள்ள அவரது பஞ்சதன் ரெகார்ட் இன் (Panchathan Record Inn) மற்றும் ஏ.எம் ஸ்டூடியோ (AM Studio) ஆகியவற்றில் ஒலிப்பதிவு செய்யப்பட்டன. இவை ஆசியாவில் உள்ள அதிநவீன தொழிநுட்பங்களை கொண்ட ஸ்டூடியோக்கள் ஆகும்.

படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்துக்கொண்டிருக்கின்றன. இத்திரைப்படம் இவ்வருடம் நவம்பர் மாதம் 29 ஆம் திகதி திரையிடப்படுவதாக ஷங்கர் தெரிவித்துள்ளார். நிறைய சிறப்பம்சங்களை கொண்ட இப்படம் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. படம் எவ்வாறு இருக்கப்போகின்றதென்று பொருத்திருந்து பார்ப்போம்.


Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *