கிரிக்கெட் போட்டி என்றாலே கிரிகெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். உலக கிண்ண கிரிக்கெட் போட்டி என்றால் அதன் எதிர்பார்ப்புகள் பல மடங்கு அதிகரிக்கும். அந்தவகையில் 2019 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் ஐசிசி கிரிக்கெட் உலக கிண்ண போட்டியானது உலகமெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு சந்தோஷத்தையும் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆம், அடுத்த கிரிக்கெட் உலக கிண்ண போட்டிகள் 2019 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 14 ஆம் திகதி வரை ஐக்கிய இராச்சியத்தில் நடக்கவிருக்கின்றன. இது உலக கிண்ண வரலாற்றில் 12 வது முறையாக நடத்தப்படும் போட்டியாகும். அத்துடன் ஐக்கிய இராச்சியத்தில் நடத்தப்படும் 5 வது உலக கிண்ண போட்டியாகும்.
கிரிக்கெட் உலக கிண்ணத்தின் ஆரம்பம்
உலக கிண்ண கிரிக்கெட் போட்டியானது. 1975 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது. அவ்வாண்டு ஜூன் மாதம் 7 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை நடைபெற்ற போட்டிகளானது இங்கிலாந்து, இந்தியா, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், கிழக்கு ஆபிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய 8 அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இவ்வணிகளுக்கிடையில் மொத்தமாக 15 போட்டிகள் நடைபெற்றன. தற்போது நடைபெறும் போட்டிகளை போல் 50 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக அமையவில்லை. 1 வது உலக கிண்ண போட்டிகளில் அணிக்கு 60 ஓவர்கள் வழங்கப்பட்டன. விளையாட்டு வீரர்கள் வெள்ளை நிற சீருடை அணிந்ததுடன் விளையாடுவதற்கு சிவப்பு நிற பந்தும் பயன்படுத்தப்பட்டது. 1 வது உலக கிண்ண இறுதிப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதின. அந்தவகையில் உலக கிண்ண வரலாற்றில் 1 வது உலக கிண்ணத்தை மேற்கிந்திய தீவுகள் அணி வென்று சரித்திரத்தில் இடம் பிடித்தது.
இதுவரை உலக கிண்ணத்தை வென்றுள்ள அணிகள் பற்றிய விபரம்
அணி |
வென்றுள்ள தடவைகள் |
அவுஸ்திரேலியா | 5 – 1987, 1999, 2003, 2007, 2015 |
மேற்கிந்திய தீவுகள் | 2 – 1975, 1979 |
இந்தியா | 2 – 1987, 2011 |
பாகிஸ்தான் | 1 – 1992 |
இலங்கை | 1 – 1996 |
2019 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் உலக கிண்ண போட்டிகளுக்கு தகுதிபெற்றுள்ள அணிகள்
- இங்கிலாந்து
- அவுஸ்திரேலியா
- வங்காளதேசம்
- இந்தியா
- நியூசிலாந்து
- பாகிஸ்தான்
- தென் ஆபிரிக்கா
- இலங்கை
- ஆப்கானிஸ்தான்
- மேற்கிந்திய தீவுகள்
போட்டி முறைகள்
- ரவுண்ட் ரொபின் (Round Robin)
ரவுண்ட் ரொபின் என்பது ஒரு அணி போட்டியில் பங்குபற்றும் மற்ற அனைத்து அணிகளுடனும் போட்டியிட வேண்டும் என்பதாகும். 1 வது சுற்றை பொருத்தவரை இச்செயல்முறை பயன்படுத்தப்படும்.
- நொக் அவுட் (Knockout)
நொக் அவுட் முறை என்பது போட்டிகளின் போது தோல்வியடைந்த அணியானது போட்டியிலிருந்து உடனடியாக நீக்கப்படும் என்பதாகும். அதாவது ஒரு அணி 1 வது முறையே தோற்றுப்போனால் அந்த அணிக்கு எக்காரணத்திலும் மீண்டும் விளையாட வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது. இச்செயல்முறையானது அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகளில் பயன்படுத்தப்பட உள்ளது.
போட்டிகள் நடைபெற இருக்கும் மைதானங்கள் பற்றிய விபரங்கள்
மைதானத்தின் பெயர் |
அமைந்துள்ள நகரம் |
எட்க்பாக்ஸ்டன் (Edgbaston) | பர்மிங்காம் (Birmingham) |
பிரிஸ்டல் கண்ட்ரி க்ரவுண்ட்
(Bristol Country Ground) |
பிரிஸ்டல் (Bristol) |
சோபியா கார்டன்ஸ் (Sophia Gardens) | கார்டில் (Cardiff) |
ரிவர்சைட் க்ரவுண்ட்
(Riverside Ground) |
செஸ்டர் லீ ஸ்ட்ரீட்
(Chester Le Street) |
ஹெட்டிங்லே (Headingley) | லீட்ஸ் (Leeds) |
த ஓவல் (The Oval) | இலண்டன் (London) |
லோட்ஸ் (Lord`s) | இலண்டன் |
ஓல்ட் ட்ராஃபோர்ட் (Old Trafford) | மன்செஸ்டர் (Manchester) |
ட்ரெண்ட் ப்ரிட்ஜ் (Trent Bridge) | நோட்டிங்காம் (Nottingham) |
ரோஸ் பொவ்ல் (Rose Bowl) | சவுதம்ப்டன் (Southampton) |
கவுண்டி க்ரவுண்ட் (County Ground ) | தாண்டன் (Taunton) |
போட்டிகள் பற்றிய விபரங்கள்
திகதி |
நேரம் |
அணிகள் |
||
30-05-2019 |
10:30 |
இங்கிலாந்து |
V |
தென் ஆபிரிக்கா |
31-05-2019 |
10:30 |
பாகிஸ்தான் |
V |
மேற்கிந்திய தீவுகள் |
01-06-2019 |
10:30 |
நியூசிலாந்து |
V |
இலங்கை |
01-06-2019 |
13:30 |
அவுஸ்திரேலியா |
V |
ஆப்கானிஸ்தான் |
02-06-2019 |
10:30 |
வங்காளதேசம் |
V |
தென் ஆபிரிக்கா |
03-06-2019 |
10:30 |
இங்கிலாந்து |
V |
பாகிஸ்தான் |
04-06-2019 |
10:30 |
ஆப்கான்ஸ்தான் |
V |
இலங்கை |
05-06-2019 |
10:30 |
இந்தியா |
V |
தென் ஆபிரிக்கா |
05-06-2019 |
13:30 |
வங்காளதேசம் |
V |
நியூசிலாந்து |
06-06-2019 |
10:30 |
அவுஸ்திரேலியா |
V |
மேற்கிந்திய தீவுகள் |
07-06-2019 |
10:30 |
பாகிஸ்தான் |
V |
இலங்கை |
08-06-2019 |
10:30 |
இங்கிலாந்து |
V |
வங்காளதேசம் |
08-06-2019 |
13:30 |
ஆப்கானிஸ்தான் |
V |
நியூசிலாந்து |
09-06-2019 |
10:30 |
அவுஸ்திரேலியா |
V |
இந்தியா |
10-06-2019 |
10:30 |
தென் ஆபிரிக்கா |
V |
மேற்கிந்திய தீவுகள் |
11-06-2019 |
10:30 |
வங்காளதேசம் |
V |
இலங்கை |
12-06-2019 |
10:30 |
அவுஸ்திரேலியா |
V |
பாகிஸ்தான் |
13-06-2019 |
10:30 |
இந்தியா |
V |
நியூசிலாந்து |
14-06-2019 |
10:30 |
இங்கிலாந்து |
V |
மேற்கிந்திய தீவுகள் |
15-06-2019 |
10:30 |
அவுஸ்திரேலியா |
V |
இலங்கை |
15-06-2019 |
13:30 |
ஆப்கானிஸ்தான் |
V |
தென் ஆபிரிக்கா |
16-06-2019 |
10:30 |
இந்தியா |
V |
பாகிஸ்தான் |
17-06-2019 |
10:30 |
வங்காளதேசம் |
V |
மேற்கிந்திய தீவுகள் |
18-06-2019 |
10:30 |
இங்கிலாந்து |
V |
ஆப்கானிஸ்தான் |
19-06-2019 |
10:30 |
நியூசிலாந்து |
V |
தென் ஆபிரிக்கா |
20-06-2019 |
10:30 |
அவுஸ்திரேலியா |
V |
வங்காளதேசம் |
21-06-2019 |
10:30 |
இங்கிலாந்து |
V |
இலங்கை |
22-06-2019 |
10:30 |
ஆப்கானிஸ்தான் |
V |
இந்தியா |
22-06-2019 |
13:30 |
நியூசிலாந்து |
V |
மேற்கிந்திய தீவுகள் |
23-06-2019 |
10:30 |
பாகிஸ்தான் |
V |
தென் ஆபிரிக்கா |
24-06-2019 |
10:30 |
ஆப்கான்ஸ்தான் |
V |
வங்காளதேசம் |
25-06-2019 |
10:30 |
இங்கிலாந்து |
V |
அவுஸ்திரேலியா |
26-06-2019 |
10:30 |
நியூசிலாந்து |
V |
பாகிஸ்தான் |
27-06-2019 |
10:30 |
இந்தியா |
V |
மேற்கிந்திய தீவுகள் |
28-06-2019 |
10:30 |
தென் ஆபிரிக்கா |
V |
இலங்கை |
29-06-2019 |
10:30 |
ஆப்கானிஸ்தான் |
V |
பாகிஸ்தான் |
29-06-2019 |
13:30 |
அவுஸ்திரேலியா |
V |
நியூசிலாந்து |
30-06-2019 |
10:30 |
இங்கிலாந்து |
V |
இந்தியா |
01-07-2019 |
10:30 |
இலங்கை |
V |
மேற்கிந்திய தீவுகள் |
02-07-2019 |
10:30 |
வங்காளதேசம் |
V |
இந்தியா |
03-07-2019 |
10:30 |
இங்கிலாந்து |
V |
நியூசிலாந்து |
04-07-2019 |
10:30 |
ஆப்கானிஸ்தான் |
V |
மேற்கிந்திய தீவுகள் |
05-07-2019 |
10:30 |
வங்காளதேசம் |
V |
பாகிஸ்தான் |
06-07-2019 |
10:30 |
இந்தியா |
V |
இலங்கை |
06-07-2019 |
13:30 |
அவுஸ்திரேலியா |
V |
தென் ஆபிரிக்கா |
அரை இறுதி போட்டிகள்
திகதி |
நேரம் |
அணிகள் |
||
09-07-2019 |
10:30 | தகுதி பெற்ற அணி
1 |
V | தகுதி பெற்ற அணி
4 |
11-07-2019 | 10:30 | தகுதி பெற்ற அணி
2 |
V |
தகுதி பெற்ற அணி 3 |
இறுதி போட்டி
திகதி |
நேரம் |
அணிகள் |
||
14-07-2019 |
10:30 | அரை இறுதி வென்ற
அணி 1 |
V |
அரை இறுதி வென்ற அணி 2 |
(இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நேரங்களும் பிரித்தானிய நேர அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன (UTC+1:00))
இந்த அனைத்து போட்டிகளையும் பார்வையிட இப்பொழுதிலிருந்தே கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாக உள்ளார்கள். ரசிகர்கள் தான் விரும்பும் அணியின் மீது அதிக எதிர்பார்ப்புகளை வைத்துள்ளார்கள். கிரிக்கெட் போட்டிகளை பொருத்தவரையில் இறுதி பந்து வரை என்ன நிகழும் என்று சரியாக எதிர்வு கூறவே முடியாது. கிரிக்கெட்டின் சுவாரஸ்யமே அதுதான். இம்முறை உலக கிண்ண கோப்பையை வெல்லப்போவது யார் என்று பொறுத்திருந்து பார்ப்போம். அனைத்து அணிகளுக்கும் முன்கூட்டிய வாழ்த்துக்கள்.