உலகத்தில் வாழும் அனைவருக்கும் விளையாட்டுக்கள் என்பது எல்லோராலும் அதிகம் விரும்பப்படுகிறதொன்றாக மாறிவிட்டது. சிலர் அதை தொழிலாகவும் இலட்சியமாகவும் வைத்திருக்கிறார்கள். பலர் பொழுதுபோக்கு அம்சமாக கொண்டிருக்கிறார்கள்.
அந்தவகையில், தற்போது உலகத்தில் மிகவும் பிரசித்தமானதும் எல்லோராலும் விரும்பப்படுகின்ற ஒரு விளையாட்டு தான் இந்த கால்பந்து விளையாட்டு (Football in Tamil).
உலகிலேயே இந்த விளையாட்டை விரும்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்த அளவிற்கு அனைவரும் விரும்பும் விளையாட்டாக கால்பந்து (Football in Tamil) உருவாகியுள்ளது.
கால்பந்து விளையாட்டின் ஆரம்பம் (Beginning of World Football Game)
உலகின் மிகவும் பிடித்தமான விளையாட்டான கால்பந்தின் (Football in Tamil) சமகால வரலாறு 1863 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன் இவ்விளையாட்டின் முதல் ஆளும் குழுவாக கால்பந்து சங்கமும் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டது.
“நாட்டுப் புற கால்பந்து” என்ற பொதுவான தலைப்பின் அடிப்படையில் பல்வேறு விதிமுறைகளில் 19 ஆம் நூற்றாண்டு வரை கால்பந்து (Football in Tamil) விளையாட்டு விளையாடப்பட்டுள்ளது. 1820 ஆம் ஆண்டில் இருந்து பொதுப் பாடசாலைகளிலும் கேம்பிரிஜ் (Cambridge) பல்கலைக்கழகத்திலும் விதிகளை ஒன்றினைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
1871 தொடக்கம் 1872 வரையிலான காலப்பகுதியில் கால்பந்து சங்க கிண்ணம் (Football Association Cup) உலகின் முதலாவது ஒருங்கிணைக்கப்பட்ட போட்டியாக தொடங்கிவைக்கப்பட்டது.
உலகின் முதலாவது சர்வதேச கால்பந்தாட்ட போட்டி 1872 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் திகதி இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையில் ஸ்கொட்லாந்தில் பார்டிக் (Partick) என்னும் இடத்தில் அமைந்துள்ள ஹாமில்டண் க்ரசெண்ட் (Hamilton Crescent) எனும் மைதானத்தில் நடந்தது.
அன்று 4000 பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட இந்த போட்டியானது 0-0 என்றவகையில் சமநிலையில் முடிவடைந்தது.
உலகில் கால்பந்தாட்டத்திற்கு வழங்கப்படும் பெயர்கள் (Names given to football in the world)
கால்பந்தை (Football in Tamil) ஐக்கிய இராச்சியத்தில் ஃபுட்போல் (Football) என்று அழைப்பார்கள். ஐக்கிய அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் சோசர் (Soccer) என்று கால்பந்து (Football in Tamil) அழைக்கப்படுகிறது. தென் ஆபிரிக்கா, நியூசிலாந்து, அயர்லாந்து, அவுஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளில் இந்த இரு பெயர்களும் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன.
கால்பந்தாட்டத்தின் அடிப்படை விதிமுறைகள் (The basic rules of world football)
- அணிக்கு 11 பேர் விளையாடுவார்கள். அதில் ஒருவர் இலக்குக்காவலர் (Goalkeeper) ஏனைய 10 பேர்களும் வெளிபரப்பு ஆட்ட வீரர்களாக (Outfield Players) இருப்பார்கள்.
- போட்டி 90 நிமிடங்களை கொண்டிருக்கும். அதில் 15 நிமிட இடைவேளையும் (Break) அடங்கியிருக்கும். 90 நிமிட விளையாட்டில் மேலதிக நேரமும் உட்படுத்தப்பட்டிருக்கும். போட்டியின் நடுநேர இடைவேளை அரைநேரம் (Half-Time) என அழைக்கப்படுகிறது.
- அதிக கோல்களை (Goal) பெற்ற அணி வெற்றி பெற்ற அணியாக கொள்ளப்படுவதுடன் புள்ளிகள் சமனாயின் போட்டி சமநிலை (Draw) என்றும் கருதப்படுகிறது.
- போட்டியாளர்கள் கை, மேற்கையை பயன்படுத்த முடியாது. இலக்கு காவலர் (Goalkeeper) மட்டும் அவரது பெனால்டி பகுதியில் (Penalty Area) பயன்படுத்த முடியும்.
- போட்டியில் அணிக்கு தலா மூன்று பதிலாளர்கள் (Substitutes) வரை வைத்திருக்க அனுமதி அளிக்கப்படும்.
- விளையட்டு வீரர்கள் மற்ற வீரர்களை கால்தடுமாற்றம் செய்யவோ அல்லது தள்ளவோ கூடாது. அவ்வாறு நடந்துகொள்வார்களேயானால் அது முறை தவறிய ஆட்டமாக (Foul) கருதப்படும்.
- விளையாட்டு வீரர் முறை தவறிய ஆட்டத்தை (Foul) மேற்கொண்டால் மஞ்சள் நிற அட்டையை காட்டப்படுவார். அவ்வாறு இருமுறை காட்டப்பட்டால் அவருக்கு சிவப்பு நிற அட்டை காட்டப்படும். அப்படி சிவப்பு அட்டை காட்டப்பட்டால் அவர் விளையாட்டு தளத்தில் இருந்து வெளியேற்றப்படுவார். அத்துடன் அவருக்கு அந்த போட்டியில் இறுதிவரை விளையாட அனுமதி அளிக்கப்படமாட்டது.
பீபா (FIFA) உலக கிண்ணம் பற்றிய ஓர் ஆய்வு (A study of the FIFA world cup)

பீபா உலக கிண்ணம் என்பது (FIFA World Cup) 1930 இல் நிறுவப்பட்ட சர்வதேச சங்க கால்பந்து (Football in Tamil) போட்டியாகும். சர்வதேச ஆளும் குழுவான சங்க கால்பந்தாட்ட சர்வதேச கூட்டமைப்பின் ஆண்களுக்கான தேசிய அணிகளினுடைய அங்கத்தவர்களால் போட்டியிடப்படுகிறது.
FIFA என்பதன் பொருள் என்ன? (What does FIFA mean?)
Federation Internationale de Football Association என்று பிரென்சு (French) மொழியில் சொல்லப்படுகிறது. அதாவது ஆங்கிலத்தில் International Federation of Association Football என்று கூறப்படுகிறது. இது தமிழில் சங்க கால்பந்தாட்டத்தின் சர்வதேச கூட்டமைப்பு என்று அழைக்கப்படுகிறது.
கால்பந்தாட்டத்தின் பாரிய சர்வதேச போட்டிகளின் அமைப்புக்கு FIFA பொறுப்பாக இருக்கிறது. ஆண்களுக்கான FIFA உலக கிண்ணம் 1930 ஆம் ஆண்டிலும் பெண்களுக்கான உலக கிண்ணம் 1991 ஆம் ஆண்டிலும் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
FIFA உலக கிண்ண போட்டிக்கள் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டிலிருந்து 4 வருடத்துக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இருந்தபொழுதிலும் கூட, 1942 ஆம் ஆண்டும் 1946 ஆம் ஆண்டும் இரண்டாவது உலக போர் காரணமாக போட்டிகள் இரத்து செய்யப்பட்டன.
இதுவரை நடந்த FIFA உலக கிண்ண கால்பந்தாட்ட இறுதி போட்டிகள் பற்றிய விபரங்கள் பின்வருமாறு. (Following are the details of the FIFA World Cup finals so far.)
வருடம் | வென்ற அணி | தோற்ற அணி | புள்ளிகள் |
1930 |
உருகுவே |
ஆர்ஜெண்டினா |
4-2 |
1934 |
இத்தாலி |
செக்கோஸ்லோவாக்கியா |
2-1 |
1938 |
இத்தாலி |
ஹங்கேரி |
4-2 |
1950 |
உருகுவே |
பிரேசில் |
2-1 |
1954 |
மேற்கு ஜேர்மணி |
ஹங்கேரி |
3-2 |
1958 |
பிரேசில் |
சுவீடன் |
5-2 |
1962 |
பிரேசில் |
செக்கோஸ்லோவாக்கியா |
3-1 |
1966 |
இங்கிலாந்து |
மேற்கு ஜேர்மணி |
4-2 |
1970 |
பிரேசில் |
இத்தாலி |
4-1 |
1974 |
மேற்கு ஜேர்மணி |
நெதர்லாந்து |
2-1 |
1978 |
ஆர்ஜெண்டினா |
நெதர்லாந்து |
3-1 |
1982 |
இத்தாலி |
மேற்கு ஜேர்மணி |
3-1 |
1986 |
ஆர்ஜெண்டினா |
மேற்கு ஜேர்மணி |
3-2 |
1990 |
மேற்கு ஜேர்மணி |
ஆர்ஜெண்டினா |
1-0 |
1994 |
பிரேசில் |
இத்தாலி |
0-0 |
பெனால்டி முறை (Penalty) |
3-2 |
||
1998 |
பிரான்ஸ் |
பிரேசில் |
3-0 |
2002 |
பிரேசில் |
ஜேர்மணி |
2-0 |
2006 |
இத்தாலி |
பிரான்ஸ் |
1-1 |
பெனால்டி முறை (Penalty) |
5-3 |
||
2010 |
ஸ்பெயின் |
நெதர்லாந்து |
1-0 |
2014 |
ஜேர்மணி |
ஆர்ஜெண்டினா |
1-0 |
2018 |
பிரான்ஸ் |
குரோசியா |
4-2 |
இதுவரை நடந்த போட்டிகளில் அதிக FIFA உலக கிண்ணத்தை பெற்ற பெருமையை பிரேசில் பெறுகிறது.
இதையும் வாசிக்க: