தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான இளைய தளபதி விஜய் வசூல் மன்னனாக திகல்கிறார் என்று சமீபத்திய ஆய்வுகளில் இருந்து தெரிய வருகிறது. அந்த வகையில் கடந்த வருடம் இயக்குநர் அட்லி இயக்கத்தில் வெளிவந்த மெர்சல், பொக்ஸ் ஒபீஸ் (Box Office) படமாக வலம் வந்து வசூல் சாதனை படைத்தது. அது மட்டுமல்லாமல் கடந்த காலங்களில் நடிகர் விஜயின் தோல்வி படங்கள் என்று கருதப்பட்ட படங்கள் கூட தற்போது தமிழர்கள் செறிந்து வாழும் இடங்களில் மீண்டும் தியேட்டர்களில் திரையிடப்படுவது குறிப்பிடத்தக்கது. ஒரு சில வருடங்களில் இவரது படங்கள் தொடர் தோல்வியை கண்ட போதிலும் கடந்த வருடங்களில் வந்த படங்கள் வசூல் சாதனை படைத்ததோடு மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்ததென்றே கூறலாம்.
சமூக வலைத்தளங்கலான பேஸ்புக் (Facebook), ட்விட்டர் (Twitter), இன்ஸ்டாகிறாம் (Instagram), மற்றும் யூடியுப் (YouTube), போன்ற வலைத்தளங்களில் கூட நடிகர் விஜய் பற்றி தான் அதிகம் தேடப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பல முன்னணி இணையதளங்களில் “தமிழில் ரசிகர்கள் யாருக்கு அதிகம்?” என்று நடத்தப்படும் கருத்துக்கணிப்புகளில் விஜய் தான் அதிகமான வெற்றியை பெற்றார். நடிகர் விஜய் பற்றி கூகுல் ட்ரெண்ட் (Google Trend) சொல்லும் விடயங்களை பார்க்கலாம்.
அதிகம் தேடிய நாடுகள் மற்றும் நகரங்களின் விபரங்கள்
பொதுவாக பார்த்தால் உலகில் அனைத்து நாடுகளிலும் நடிகர் விஜய் தேடப்பட்டுள்ளார். அந்த வரிசையில், நாடுகள் அடிப்படையில் பார்க்கும் போது கடந்த 10 வருட காலத்தில் இலங்கையிலும் இந்தியாவிலும் தான் அதிகம் தேடியுள்ளார்கள். இதில் நடிகர் விஜய்யை அதிகம் தேடிய பட்டியலில் இலங்கை தான் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் இந்தியாவும் பொலிவியா, கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள் முறையே மூன்றாம், நான்காம், ஐந்தாம் இடங்களிலும் உள்ளன.
அதேபோல் உலக அளவில் நகர அடிப்படையில் எடுத்துக் கொண்டால் இந்தியாவின் தஞ்சாவூர் மக்களால் தான் விஜயின் பெயர் அதிகம் தேடப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் திருச்சிபள்ளி, புதுச்சேரி, கோயம்புத்தூர், மதுரை, ஆகிய நகரங்கள் முறையே இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம் இடங்களில் உள்ளன. இலங்கையில் ஹோமாகமை ஏழாம் இடத்திலும் கொழும்பு ஒன்பதாம் இடத்திலும் உள்ளன.
விஜயின் பெயர் அதிகமாக தேடப்பட்ட நிலையிலும் தெறி விஜய் என்று தான் அதிகம் உலகமெங்கும் தேடியிருக்கிறார்கள். அதற்கு அடுத்ததாக ஜில்லா விஜய், மெர்சல் விஜய் என்றும் அதிகமாக தேடப்பட்டுள்ளார் விஜய். இவ்வாறு படங்களின் பெயர் சேர்த்தும் பரவலாக தேடப்பட்டு இருக்கிறார் இளைய தளபதி விஜய்.
வழக்கமாக புதுப் படங்கள் வரும் போது யூடியுபில் (YouTube) அவற்றின் டீசர் / ட்ரெய்லர் தான் அதற்கு முன் அதிக எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு மத்தியில் ஏற்படுத்துகிறது. இந்திய தமிழ் சினிமாவில் நடிகர்களில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரின் டீசர்கள் மற்றும் ட்ரெய்லர்கள் மாறி மாறி தனது சாதனைகளை முறியடித்துக் கொள்கின்றன. அவ்வாறு பார்க்கும் பொழுது நடிகர் விஜய் மூன்று வேடங்களில் நடித்த மெர்சல் திரைப்பட டீசர் (Teaser) தான் இந்தியாவில் இதுவரை வந்த திரைப்படங்களின் டீசர்களுக்கிடையில் முதன் முதலாக உலக சாதனை படைத்தது. இந்த டீசர் ஏறத்தாழ 40 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாலர்களால் பார்க்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு மில்லியன் லைக்ஸ்களுக்கு (Likes) மேல் வாங்கியுள்ளது. இது விஜயின் ரசிகர்கள் அவர் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்பை எடுத்து சொல்வதற்கான சிறந்த உதாரணம் என்றே கூறலாம். அத்தோடு தமிழர்களின் பெருமையை எடுத்து சொல்லும் வகையில் எழுதப்பட்ட மெர்சல் திரைப்படத்தின் “ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே” என்ற பாடல் தமிழர்களுக்கிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதோடு விஜய்க்கு பெரிய ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அந்த பாடல் தற்போதுவரை 77 மில்லியனுக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது உலகில் எல்லா நாடுகளிலும் விஜயின் புதுப் படங்கள் திரையிடப்பட்டு வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் திரைப் படங்கள் தான் உலகமெங்கும் திரையிடப்பட்டு வந்தன. சமீபத்திய காலங்களில் விஜயின் படங்களும் உலகமெங்கும் திரையிடப்பதுவது அவரது ரசிகர்களுக்கு பேரானந்தத்தை ஏற்படுத்துகிறது. தமிழ் மொழி பேசும் மக்களை தவிர பிற மொழிகளை பேசும் மக்கள் கூட தற்போது இவரின் படங்களை அதிகமாக பார்க்கிறார்கள். அதுமட்டுமன்றி மற்ற மொழிகளிலும் டப் (Dub) செய்யப்பட்டு வெளிநாடுகளில் திரையிடப்பட்டு வருகின்றன.
அடுத்த சூப்பர் ஸ்டாரா விஜய்!
கூகுல் ட்ரெண்ட் கூறும் அறிக்கை ஆதாரங்களை வைத்து பார்க்கும் பொழுது கடந்த பத்து வருட காலத்தில் நடிகர் விஜயின் அபார வளர்ச்சி பற்றி அறிய முடிகிறது. அத்துடன் மற்ற நடிகர்களை விட தனக்கென மாபெரும் ரசிகர் பட்டாளத்தை உலகமெங்கும் உருவாக்கி இருக்கிறார் என்பதற்கு இவை எல்லாம் சிறந்த உதாரணங்கள் என்றே கூறலாம். தற்போதெல்லாம் அவரது பட பூஜை தொடக்கம் படம் திரையிடப்படும் காலம் வரை பல்வேறுபட்ட கோணங்களிலும் பல எதிர்பார்ப்புக்களுடன் அவரது ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இது அவர் அடுத்த சூப்பர் (Super Star) ஸ்டார் ஆவார் என்பதற்கான ஒரு சான்று என்றே கூற முடியும். என்ன நடக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.