இந்திய தமிழ் சினிமாவில் முண்ணனி நடிகர்களில் ஒருவர் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் அவர்கள். தற்போது வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களை மட்டுமே கொடுத்து வருவதோடு தயாரிப்பாளர்கள் அவர் மீது வைத்த விஸ்வாசத்தை காப்பாற்றி வெற்றியை கொடுத்து வருகிறார் என்றே சொல்லவேண்டும். அந்தவகையில் நடிகர் அஜித் மற்றும் சிறுத்தை சிவாவின் வெற்றி கூட்டணியில் நான்காவது படமாக உருவாகியுள்ளது விஸ்வாசம்.
நடிகர்கள்
- அஜித்குமார்
- நயன்தாரா
- ஜகபதி பாபு
- அனிகா
- விவேக்
- தம்பி ராமைய்யா
- யோகி பாபு
- போஸ் வெங்கட்
- ரொபோ சங்கர்
- கோவை சரளா
இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன், அர்ஜூன் தியாகராஜன் மற்றும் T.G தியாகராஜன் ஆகியோர் தயாரித்துள்ளார்கள். ஆதி நாராயணா என்பவருடன் இணைந்து திரைக்கதை எழுதி படத்தை இயக்கியுள்ளார் சிவா. படத்திற்கு D. இமான் இசையமைத்துள்ளார். கண்டிப்பாக துள்ளலான பாடல்கள் இடம்பெறும் என்பதற்கு எந்த சந்தேகமும் இல்லை. ஒளிப்பதிவு பணிகளை வெற்றி மேற்கொள்ள படத்தொகுப்பை ரூபன் செய்திருக்கிறார்.
இப்படத்தை பொறுத்தவரை மிக முக்கியமான விடயம் என்னவென்றால் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பது தான். அதுவும் சிவாவின் இயக்கத்தில் நடிப்பதால் தல ரசிகர்களின் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சிவா இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்த சிறுத்தை படத்தின் பாரிய வெற்றியை பார்க்கும் போது இப்படமும் மெகா ஹிட்டாகும் என எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித் மற்றும் நயன்தாரா ஆகியோர் நான்காவது முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்கள். இவர்கள் நடித்து வெளிவந்த பில்லா, ஏகன், ஆரம்பம் ஆகிய படங்களும் சூப்பர் ஹிட்டானதை அடுத்து இப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெறும் என அறியமுடிகிறது. அத்துடன் என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்த பேபி அனிகா மீண்டும் அஜித்தின் மகளாக நடித்துள்ளார். மேலும் ரொபோ சங்கர் அஜிதுடன் முதன் முறையாக இணைந்து நடித்திருக்கிறார்.
இசையமைப்பாளர் D. இமான் அவர்கள் அஜித்தின் படத்திற்கு முதன் முதலாக இசையமைத்த படம் இதுவாகும். அஜித்தின் படத்திற்கு இசையமைத்ததற்கு மிகவும் சந்தோஷப்படுவதாக அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மற்றும் இசை வெளியீட்டு விழா பற்றிய எந்த அறிவித்தல்களையும் உத்தியோகபூர்வமாக இன்னும் படக்குழுவினர் அறிவிக்கவில்லை. இப்படம் நகைச்சுவை கலந்த கிராமத்து கதையை கொண்ட படம் என்பதால் வீரம் படத்தில் இடம்பெற்ற பாடல்களை போன்று இருக்க வாய்ப்பு உள்ளது.
ஏற்கனவே இரண்டு போஸ்டர்கள் வெளியாகியுள்ளபோதிலும் கடந்த 25 ஆம் திகதி மோஷன் போஸ்டர் மிகவும் மாஸாக வெளியாகியிருந்தது. நடிகர் தம்பி ராமையாவின் குடலில் இடம்பெற்ற “தூக்கு தொரனா அடாவெடி, தூக்கு தொரனா அலப்பர, தூக்கு தொரனா தடாலடி, தூக்கு தொரனா கட்டுக்கடங்காத கிராமத்து காட்டு அடி” என்று கூறும் வசனங்கள் படத்தின் மாஸையும் அதில் அடங்கியிருக்கும் வீரத்தையும் நன்கு வெளிப்படுத்துகிறது. இதுவரை 7.7 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ள இந்த மோஷன் போஸ்டர் ஐந்து இலட்சத்து ஏழாயிரம் லைக்களுக்கு மேல் வாங்கியுள்ளது.
மோஷன் போஸ்ட்டரில் படம் பொங்களுக்கு வெளியாகும் என உத்தியோகபூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளார்கள். இருந்த பொழுதிலும் கூட படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் பற்றிய எந்த அறிவித்தலும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அவை எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
நகைச்சுவையாளர் பட்டாளமே நடித்திருக்கும் இப்படத்தில் நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது என்று தோன்றுகிறது. உண்மையிலேயே இப்படம் கிராமத்து கதையை தழுவிய குடும்ப படமாக இருக்கும். தல ரசிகர்களுக்கு இம்முறை பொங்கள் திருவிழாவாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
படக்குழுவினருக்கு முன்கூட்டிய வாழ்த்துக்கள்.